நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் மீண்டும் ஒரு காதல் கதை, தண்டேல்.
சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்க, இசை தேவி ஶ்ரீ பிரசாத்..

நாக சைதன்யா ( ராஜு) சாய் பல்லவி மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வரும் நிலையில், தனக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கும் படி தன் தந்தை பப்லூ விடம் சொல்ல, மாப்பிள்ளையாக கருணாகரன் வருகிறார்..அவரிடம் தன் காதல் கதையை சொல்ல ஆரம்பிக்க,

இதில் நாக சைதன்யா, 9 மாதம் குஜராத் தாண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க போக மீதம் 3 மாதம் ஊருக்கு வரும் வேளையில் இருவரும் சந்தோஷமாக இருக்க, நாக சைதன்யா தண்டெல் அதாவது அந்த மீனவ கும்பலுக்கு தலைவனாக பொறுப்பேற்கிறார்..
தலைவனாக பொறுப்பேற்று அடுத்த முறை
முறை சாய் பல்லவி எவ்வளவு சொல்லியும் நாக சைதன்யா கேளாமல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல, அப்போது பெரும் புயல் அடிக்க, அப்புயலில் மாட்டிகொண்ட வேறொரு நபரை காப்பாற்ற நேரிடுகிறது…அவ்வேளையில் படகு பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட , அவோரோடு சேர்ந்து படகில் பயணித்த அனைத்து நண்பர்களோடு பாக்கிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்..

அவர்களிடம் இருந்து நாக சைதன்யா தப்பித்து இந்தியா வந்து சேருகிறாரா ? அடுத்து சாய் பல்லவிக்கும் கருனா கரணுக்கும் நடக்கவிருந்த திருமணம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை. 

மீனவ தலைவனாக, மாஸ் ஹீரோவாக கலக்கியிருக்கிறார் நாக சைதன்யா. காதல் வயப்படும் போதும், நண்பர்களை விட்டுக்கொடுக்காமல் நிற்கும் போதும் சரி, நம் தேசியக்கொடியை பாக் கிஸ்தானியர் அவமதிக்கும் போது உணர்ச்சி மிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சே…
கண்களில் காதல் கொப்பளிக்க, உணர்ச்சி மிகு நடித்திருக்கிறார் சாய் பல்லவி. மற்ற நடிகர்களுடன் இல்லாத கெமிஸ்ட்ரி நாக சைதன்யா வோடு தெரிகிறது.

தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் இரண்டு பாடல்கள் அருமை, பின்னணி இசையும் நிறைவு.
ஒளிப்பதிவும் அருமை..

மொத்தத்தில் ரோஜா பாணியில் ஒரு அருமையான காதல் கதையை கொடுத்திருக்கிறார்..இயக்குனர் சந்து மொண்டேட்டி