JSK சதீஷ் குமார் தயாரித்து, இயக்கி, காதலர் தினத்தன்று வெளி வர இருக்கும் படம் ஃபயர்..

இப்படத்தில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மஹாலக்ஷ்மி, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, அவர்களோடு
சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆகியோரும் நடிச்சிருக்காங்க…

நாகர்கோயிலில் இளம் பெண்களை ஏமாற்றிய ஒரு நபரின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம்உருவாக்கப்பட்டுள்ளது..

போலீஸ் அதிகாரியாக வரும், JSK சதிஷிடம் தம்பதியர் ஒருவர் காணாமல் போன தன் மகன் காசி (பாலாஜி முருகதாஸ்)யை தேடி தருமாறு கேட்க, கதை அங்கிருந்து தொடங்குகிறது..

பிசியோ தெரபிஸ்ட் டாக்டர் ஆக இருக்கும் காசி யை தேட ஆரம்பிக்கும் பட்சத்தில், அவரின் கிளினிக் மற்றும் அவரின், சோஷியல் மீடியா நண்பர்கள் என்று ஒவ்வொரு வராய் விசாரிக்க, அவரை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றது..
பல இளம் பெண்களை ஏமாற்றி, சுக போக வாழ்கையை வாழ்ந்து வந்த காசியை, அவரால் ஏமாந்த மூன்று நாயகிகளும் அவரை போட்டு தள்ள முயலுகியில், மர்ம நபர் ஒருவரால் காசி கொலை செய்யப்படுகிறார் ..அந்த மர்ம நபர் யார் ? கொலைக்கான காரணம் என்ன ? என்பதே மீத கதை…

படத்தினை இயக்கியோடு மட்டுமில்லாமல் ஜே. சதீஷ் குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியுள்ளார்..
சிறிதளவும் தயக்கமின்றி நெகட்டிவ் கதா பாத்திரத்தை துணிச்சலாக ஏற்று, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் பாலாஜி..
மூன்று கதாநாயகிகளும் , கதைகேற்ப கவர்ச்சி காட்டி நடித்திருந்தாலும், ஏமாந்து விட்டோம் என்று உணர்ந்து இறுதி காட்சியில் அவர்கள் கதறுவது, அதனை மறக்கடித்து விடுகிறது..

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இப்படத்தை இயக்கிய, இயக்குனர் JSK வை பாராட்டியே ஆகவேண்டும்.

வரும் காதலர் தினத்தன்று இப்படம் வெளியாக இருப்பதால், பொழுது போக்கு காதலர்களுக்கு இப்படம் விழிப்புணர்வு பாடமாக அமய வாய்ப்பிருக்கு…