
சுழல் முதல் சீசனில் ஏகபட்ட பார்வையாளர்களை கொண்டு இன்றளவும் அரிதான இடத்தை பிடித்திருக்கிறது…அதன் 2வது சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. முதல் சீசனில் எப்படி கிரைம் த்ரில்லரை நமக்கு விறு விறு ப்பு சற்றும் குறையாமல் கொடுத்த புஷ்கர் காயத்ரி யின் படைப்பு, சுழல் 2..இந்த சீசனிலும் ரசிகர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இவர்கள் கையிலெடுத்த அந்த அஷ்ட காளி திருவிழா காட்சிகளும் 8 பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்தும் பரபரப்புக்கு பஞ்சமின்றி எடுத்து சொல்லியிருக்கிறது
முதல் சீசனில் சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லையை பற்றி பேசிய நிலையில், இரண்டாவது சீசன் இல், ஹியூமன் டிராபிக் பற்றி பேசியிருக்கிறார்கள்
சுழல் 2
நந்தினி தற்காப்புக்காகத்தான் அவரது சித்தப்பாவை கொன்றார் என்று முதல் சீசனில் கதை முடிய, அதன் தொடர்ச்சி யாக நந்தினி கதாபாத்திரம் வருகிறது..அவரை காப்பாற்ற கோர்ட்டில் வாதாடும், செல்லப்பா (லால்) மர்ம மரணம் அடைய, அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்கிற விசாரணையில் சக்கர (கதிர்)இறங்குகிறார்.
கொலை நிகழ்ந்த இடத்தில் முத்து என்ற பெண் மாட்ட, அவளின் விசாரணையின் போது, 7 பெண்கள் செல்லப்பாவை நான் தான் கொன்றேன் என காவல் நிலையங்களில் அஜராகுகிரார்கள்..
இந்த 8 பேரில், யார் செல்லப்பவை கொண்றார்கள் ?, என்று விசாரணை போய் கொண்டிருக்க மறு பக்கம் அந்த ஊரில் அஷ்டகாளி திருவிழா நடைபெறுகிறது.
8 பெண்களின் பெயர்களையும் அஷ்ட காளிகளின் பெயர்களாகவே வைத்துள்ள நிலையில், தீய சக்தியை அவர்கள் வதம் செய்தார்களா? அவர்கள் கொலை வழக்கில் சரண்டராக என்ன காரணம் என்பதை ஹீரோ கதிர் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கு என்ன என்பதும் தான் இந்த சுழல் 2 வெப்சீரிஸின் கதை.
அஷ்ட காளிகளை அடையாளப்படுத்தும் 8 இளம் பெண்களாக கெளரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா வயோலா விஸ்வநாதன், ரினி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் தங்களின் சிறப்பான நடிப்பால் கதைக்கு வடிவத்தை கொடுத்துள்ளனர்…
சமூகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் அவலங்களையும் பெண்களுக்கு சிறைச்சாலையில் நடக்கும் கொடுமைகளையும் எடுத்துக் காட்டியிருக்கும் விதமும் பாராட்டத்தக்கது ..
விறு விறுப்பான, டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ், ஐ கொண்டுள்ளதால், இருக்கையில் முனையில் தள்ளி விடுகிறது ..
சாம் சி.எஸ். பின்னணி இசை மற்றும் ஆபிரகாமின் ஒளிப்பதிவு பெரிய பலமாக இறுக்கி நம்மளை எழ விடாமல் செய்கிறது …