
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, ராசி கண்ணா, அர்ஜுன் சார்ஜா, ஷா ரா, ராதாரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அகத்தியா”..
1940-இல் நடந்த நிகழ்வுக்கும் நிகழ்காலத்தின் நடக்கும் செயலுக்கும் தொடர்பு படுத்தி, ஹாரர் த்ரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.விஜய்.
சினிமா கலை இயக்குநரான அகத்தியா (ஜீவா) ஒரு படத்துக்காக, தயாரிப்பாளருடன் சேர்ந்து, தனது சொந்தக் காசை போட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு பழங்கால பங்களாவைப் பேய் வீடாக மாற்றுகிறார். படம் திடீரென நின்று போக, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அகத்தியாவுக்கு அவரது தோழி வீணா (ராஷி கன்னா)
வெளிநாட்டில் இருக்கும் ‘ஸ்கேரி ஹவுஸ்’ போன்று இங்கு நாம் ஏன் உருவாக்கக் கூடாது? என்று ஐடியா தர, அது போலவே ஸ்கரி ஹவுஸ் ஆக மாற்ற , கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் உண்மையிலேயே சில ரகசியங்களும் புதைந்திருக்க, அங்கு அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க தொடங்குகிறது… இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜீவாவிற்கு, பிளாக் கிற்கு அடுத்து இது ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கு…சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் சர்ஜா, ஸ்கோர் செய்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் பழைய நினைவுகளில் மூழ்கடிக்கரது..
விஎப்எக்ஸ் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. கலை இயக்குநர் சண்முகத்தின் கடின உழைப்பு மற்றும் ஒளி ப்பதிவு, எடிட்டிங் என் அத்தனையும் பாராட்டும் வகையில் உள்ளது…
சித்த மருத்துவத்தை மேன்மை படுத்தி, பல வித்தியாசமான காட்சிகளை கொண்டு பேண்டசி த்ரில்லர் படமாக வந்திருக்கு…