
அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்க்தில் ஜி. வி.பிரகாஷ், திவ்ய பாரதி,அழகம் பெருமாள், சேத்தன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கிங்ஸ்டன்…
தூத்துக்குடி, கடற்கரை கிராமமான தூவத்தூர் கிராம மக்களின் கதை.. மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட அவர்கள் பல ஆண்டுகளாக பேய் பயத்தால் கடலுக்குள் செல்லாமல் இருக்க, மீறி கடலுக்குள் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவதில்லை என்ற பயத்திலும் இருக்க, அந்த பகுதி தடைப்பட்டிருக்கிறது. அந்த மக்களுக்குத் தூத்துக்குடி ஹார்பரின் கடத்தல் மன்னன் தாமஸிடம் (சபுமோன் அப்துசமத்), அடியாளாக இருக்கும் தூவத்தூரைச் சேர்ந்த கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) மூலமாக வேலை கொடுக்கிறான்.
பணத்திற்காக கிடைக்கும் வேலையை செய்து வரும் ஜி.வி, சொந்தமாக ஒரு படகை வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ..,இப்படி இருக்கையில் தாமஸுக்குக் கடல் அட்டைகளைக் கடத்தும் வேலையைத் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்து வருகிறான்.
ஒருநாள் ரோந்து பணி கடற்படை வீரர்கள் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, கூட்டாளிகளில் அப்பாவியாக இருக்கும் ஒருவரை இழக்கிறான் கிங்ஸ்டன். அந்த மரணமும் அதன் மூலம் தெரியவரும் ஓர் உண்மையும் அவனை உலுக்கிவிட, கடல் குறித்த மர்மங்களைக் கண்டறிய தன் நண்பர்களுடன் படகில் கிளம்புகிறான். கடலின் மர்மம்தான் என்ன, அதற்கும் கிங்ஸ்டனுக்கும் என்ன தொடர்பு என்பதே கிங்ஸ்டன்..
ஜி.வி. பிரகாஷ் குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திவ்ய பாரதி கு நடிக்க இன்னும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.. கிளை கதை அதிகம் இருக்க, புரிந்து கொள்ள, அவகாசம் தேவைப்படுகிறது.. எஸ்.எஸ். மூர்த்தி யின் கலை கொஞ்சம் ஆறுதல்…தொழில் நுட்ப பிரமாண்டம்…