
ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜென்டில்வுமன்..
புது மண தம்பதிகளான லிஜோமோல் ஜோஸ் (பூரணி ) ஹரி கிருஷ்ணன் தம்பதியர்கள் சென்னையில் ஒரு பிளாட் இல் குடியிருக்கின்றனர்…பூரணி யின் தோழி யின் சகோதரி ஒரு வேலை நிமித்தமாக சென்னை வர, அவள் பூரணி வீட்டில் தங்க நேரிடுகிறது…சபல எண்ணத்துடன் அப் பெண்ணை சமையல் அறையில் நெருங்க, அதில் ஏற்பட்ட மோதலில் அரவிந்த் மயக்கம் அடைகிறார். வெளியே சென்ற பூரணி வீட்டிற்கு திரும்பி வந்தபோது இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
செய்வதறியாமல் திகைக்கும் நேரத்தில், ஹரி கிருஷ்ணன் ஃபோன் அலற, அதனை கேட்க நேரிடுகிறது…அவரின் கிளையண்ட் ஆன அன்னா(லாஸ்லியா) உடன் கள்ளத்தொடர்பு இருப்பதை செல்போன் அழைப்பு மூலம் தெரிந்து கொள்கிறார் பூரணி. அதற்கு அடுத்து நடக்கும் செயல் நம்மளை அதிற வைக்க, அதில் இருந்து எப்படி வெளியில் வருகிறாள் என்பதே கதை
முதல் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. போலீசார் வந்த பிறகே கதை கொஞ்சம் சூடுபிடிக்கிறது. பூரணியாகவே வாழ்திருந்திருக்கிறார் லிஜோமோல் ஜோஸ். பெண்கள் விஷயத்தில் மோசமான கதாபாத்திரத்தில் ஹரி கிருஷ்ணன் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லாஸ்லியா விற்கும் சவாலான கதா பாத்திரம் ..போலீசாக வரும் ராஜீவ் காந்தி ரசிகர்களை கவர்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரிய பலம். . பெண்களை வெறும் போக பொருளாக பார்க்கும் ஆண்களுக்கு நேரும் கதி என்ன என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்