
7G சிவா தயாரிப்பில், பிரிட்டோ ஜேபி இயக்கத்தில், அந்தாலஜி கதைக்களத்தில் வெளி வந்திருக்கும் படம் ‘நிறம் மாறும் உலகில்’..
இப்படத்தில், பாரதிராஜா , நட்டி நடராஜன்.., ரியோ ராஜ், சாண்டி, யோகிகபாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்…
இசை – தேவ் பிரகாஷ்
தனி தனி நான்கு தனித்துவமான கதைகள் , நான்கு மே, தாய்மையை போற்றி…
இயக்குநர் தேர்வு செய்த நான்கு கதைகளும் நான்கு ஊர்களில் நடக்கின்றன. சென்னையில் ஒரு கதை, ராமேஸ்வரம் மீனவ கிராமத்தில் ஒரு கதை, திருச்சி புறநகரில் நடக்கும் ஒரு கதை, மும்பையில் நடக்கும் ஒரு கதை என வெவ்வேறு ஊர்களை உண்மையாகவே காட்சிமொழிக்குள் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..
ஒரு வாய் பேச முடியாத பெண்ணிடம் தாயின் அன்பைக் காணும் முதல் கதை. அதில் அப்துல் மாலிக் ஆக நட்டி நடராஜும் ஊரைவிட்டு ஓடிவரும் காதலர்களாக வருபவர்களில் வாய்பேச முடியாத மலராக வரும் காவ்யா வின் நடிப்புவும் அசாதரமானது…
அடுத்து, பாரதிராஜா, வடிவக்கரசி, மகன்களை வளர்த்து ஆளாக்கி நல்ல வாழ்க்கை, கொடுத்தும் அவர்களிடம் கையந்தும் வழக்கை, இறப்பிலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாத காதல் வாழ்க்கை…நடிப்பு அபாரம்
அனாதையான சாண்டிக்கு, தன் மகனால் கைவிடப்பட்ட அம்மா துளசி கிடைக்கும் கதை…
அம்மவிற்காகவே, கொலையும் செய்ய துணியும் பாசமிகு மகனாக ரியோ ராஜ்….
இப்படி
நிறம் மாறும் உலகில் இறுதியில் ஒரு உணர்ச்சிபூர்வமான படத்தினை கொடுத்த இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்…
மல்லிகா அர்ஜுன் மற்றும் மணிகண்ட ராஜா ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, தேவ் பிரகாஷ் இன் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது…