
டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்க,
தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில்,
விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன், பூர்ணிமா ரவி, பார்த்தோஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டிராமா”..
செயற்கை முறை கருத்தரிப்பில் நடக்கும் மோசடியை, வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்..
விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் மனக்கவலையில் இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் தன்னுடைய குறைபாடு தான் என்று தெரிந்த போதும், அதை தன் மனைவியிடம் வெளிபடுத்த முடியாமல் மனம் குமுறி, ஒரு கட்டத்தில், செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடுகிறார்.. அவரை பரிசோதித்த மருத்துவர், மாத்திரை ஒன்றே போதும், நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அனுப்பி வைக்க, அது போல் சாந்தினி கர்ப்பம் ஆகிறாள்..மறுபுறம் பூர்ணிமா ரவி, தான் காதலித்த, பார்த்தோஷிடம் கற்பை பறிகொடுக்க, கருவுண்டாகி, அவளின் பெற்றோர்களுக்கு தெரிய அவளை கருகலைப்புக்கு அழைத்து வருகிறார்கள்.. கார்களை திருடும் ஆசாமிகள் இருவர் என்று,
அத்தனை
கதாப்பாத்திரங்களையும் தொடர்புபடுத்தி, சாந்தினி கருவுற்றதற்கும் இந்த கதா பாத்திரங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதே மீதக்கதை..
கதாநாயகனாக நடித்து இருக்கும் விவேக் பிரசன்னா குழந்தை பேருக்கு தகுதி இல்லாத, இயலாமை யை தன் நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.. அவரது மனைவியாக நடித்த சாந்தினி தமிழரசன் தாய்மை அடைந்த ,ஆனந்தத்தை வெளிப்படுத்தும் நிலையில் எழுந்த பிரிசினையில் தவிப்பினை நன்றாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்..
மற்ற நடிகர்கள் தங்களுக்குண்டான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்…
ஏற்கனவே இது போன்ற கதைகள் வந்திருந்த போதும், இரண்டாம் பாதியில்இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். இருப்பினும்
அஜித் ஸ்ரீனிவாசனினி ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது