இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது…
கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக டைம் எடுத்தது. 2 மணி நேரத்தை ஒரு சீரிஸாக கொடுக்கும் முயற்சி தான் இது. இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், ராஜேஷ் சூசைராஜ் ஐந்தாம் வேதம் முதலே தெரியும் மிகத் திறமைசாலி, இந்த சீரிஸை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரவிந்தன், ராஜேஷ் சூசை ராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்த மாதிரி கதை நீங்கள் தான் நடிக்க வேண்டும், என்றவுடன் உடனே ஓகே சொன்ன சிங்கம்புலி அண்ணாவுக்கு நன்றி. ஐந்தாம் வேதம் சீரிஸில் என்னை ரொம்பவும் இம்ரெஸ் செய்தவர் விவேக் ராஜகோபால், மிக எளிதாக நடிப்பால் நம்மை அவர் பக்கம் ஈர்த்து விடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். ஐரா அகர்வால் மொழி தெரியாமலே டப்பிங் செய்துள்ளார், வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி. வேற வேற ஜானர்களில் ZEE5லிருந்து பல படைப்புகள் வரவுள்ளது. உங்களுக்குப் பிடித்தமாதிரி படைப்புகள் தொடர்ந்து வரும். ஆதரவு தாருங்கள் நன்றி.

மேலும் நாயகி ஐரா அகர்வால் பேசியதாவது…
மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் நடித்த வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ZEE5 கௌசிக் நரசிம்மன் சார், தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. வாய்ப்பு தந்த ராஜேஷ் சாருக்கு நன்றி. நான் நடித்ததில் எந்த படத்திலும் இந்தளவு சந்தோஷமாக இருந்ததில்லை, இந்த ஷூட்டிங் ஸ்பாட் வெகு கலகலப்பாக இருந்தது. டைரக்டர் ராஜேஷ் மிகமிக அமைதியானவர், அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிங்கம் புலி சார் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கங்காதரன் சார் எனக்கு முழு ஆதரவு தந்தார். எல்லோரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் விவேக் ராஜகோபால் பேசியதாவது…
முதலில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி, மதில் படைப்புக்கு முழு ஆதரவு தந்தீர்கள், அதனால் தான் இங்கு நான் நிற்கிறேன். செருப்புகள் ஜாக்கிரதை படைப்புக்கும் முழு ஆதரவு தாருங்கள். ZEE5 க்கு நன்றி. முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி சார் அவ்வளவு சேட்டை, லவ்லி ஹியூமன், எல்லோரையும் சிரிக்க வைப்பார் என்ன கேட்டாலும் சொல்லித் தருவார். இயக்குநர் ராஜேஷ் என்னிடம் நிறையக் கதை சொல்லியுள்ளார், எனக்கு வாய்ப்பு வந்தால் உன்னைக் கூப்பிடுவேன் என்றார். மை டார்லிங்க் ராஜேஷ் சாருக்கு நன்றி. இதில் நடித்த அனைவருக்கும் நன்றி. இந்த படைப்பிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் பேசியதாவது…
முதல் நன்றி ZEE5 கௌசிக் நரசிம்மன் சாருக்கு தான், அவர் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, ஐந்தாம் வேதம் மூலம் தான் அவர் அறிமுகம் கிடைத்தது. அவரது சினிமா அனுபவம் கற்றுக்கொள்ள வேண்டியது, என்ன சந்தேகம் கேட்டாலும் எளிதாகத் தீர்த்து விடுவார். அவருக்கு என் நன்றி. அவர் தான் சிங்காரவேலன் சாரிடம் அனுப்பி வைத்தார், தயாரிப்பைத் தாண்டி மிக நல்ல மனிதர். கௌசிக் சார், சிங்காரவேலன் இருவரால் தான் நான் இயக்குநர் இருவருக்கும் நன்றி. சிங்கம் புலி சார் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக இனிமையான மனிதர், மிக அருமையாக நடித்துள்ளார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண், ஷூட்டிங்கில், எங்களை விட அவர் நிறைய ரீல்ஸ் எடுத்துள்ளார். டார்லிங்க் விவேக், ஐந்தாம் வேதத்தில் அவர் நடிப்பு பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தக்கதை ஒகே ஆனவுடன் அவரைத்தான் அழைத்தேன், நன்றாக நடித்துள்ளார். நான் அசோஷியேட்டாக வேலை பார்த்த போது, கங்காதரனும் அசோஷியேட், நான் இயக்குநர் ஆனால் நீ தான் கேமராமேன் என்றேன் ஆக்கிவிட்டேன். இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த சீரிஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் சிங்கம்புலி பேசியதாவது…
ZEE5 நிறுவனத்திற்கு முதல் நன்றி. தயாரிப்பாளார் சிங்காரவேலன் அவர்களுக்கு நன்றி. அரசாங்கம் எல்லோரையும் மொத்தமாகப் பால் வாங்கி வைக்கச் சொன்னார்கள் அல்லவா? அப்போது ஆரம்பித்தது இந்த சீரிஸ். எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தன் பேச பேச காமெடியாக இருக்கும் அவரிடம் அத்தனை கதை இருக்கிறது. அவர் இன்னும் உயரம் தொட வேண்டும். தயாரிப்பாளர் இன்னும் அப்பாவியாக இருக்கிறார், கங்காதரன் நான் கருப்பன் செய்யும் போது, அவர் அஸிஸ்டெண்ட், இதில் அவர் ஒளிப்பதிவு எனும் பொது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன். விவேக் ராஜகோபால் மிகப்பெரிய திறமைசாலி. மிக நன்றாக நடித்துள்ளார். ஐரா மிக அழகானவர் மிகத்திறமைசாலி. இந்த சீரிஸில் நடித்த அனைவரும் மிகத் திறமையானவர்கள் நன்றாகச் செய்துள்ளார்கள். ZEE5 எங்கள் எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செருப்பு, டெட்பாடி, இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதையை எழுதியுள்ளார்கள். ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த டீமுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் எம் ராஜேஷ் பேசியதாவது…
புதிய இளமையான டீம், செருப்புகள் ஜாக்கிரதை டைட்டிலே மிக அழகாக இருக்கிறது. ZEE5 அடுத்தடுத்து நிறைய புராஜக்ட் செய்யப்போவதாக கௌஷிக் சொன்னார், அது நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பைத் தரும் அதற்காக அவருக்கு நன்றி. சிங்காரவேலன் என் நெருங்கிய நண்பர், அவருக்கு வாழ்த்துக்கள். சிங்கம்புலி அண்ணாவுடன் கடவுள் இருக்கான் குமாரு வேலை பார்த்தேன், ஆனால் மாகாராஜா பார்த்து அவர் மீது பயமே வந்து விட்டது, அவர் வந்து பேசியபிறகு தான், நம்ம அண்ணன் என்ற உணர்வு வந்தது, இப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்தது அருமை, அவர் திறமை பெரிது. அவருக்கு வாழ்த்துக்கள். விவேக் ராஜகோபால் நன்றாக நடிக்கிறார். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சீரிஸ் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.

ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், இரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

28 மார்ச் முதல் ZEE5 ல், செருப்புகள் ஜாக்கிரதை சீரிஸை பார்த்து மகிழுங்கள்