

EMI – மாத
தவணை..இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார் சதா சிவம். இவருக்கு ஜோடியாக சாய் தான்யா நடிக்க, மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி ஆகியோர் நடிசசிருக்காங்க…
மாத சம்பளக்காரரான நம்ம ஹீரோ சிவா (சதா சிவம்), கதாநாயகி சை தான்யா வை பார்த்ததும், காதலிக்க ஆரம்பிக்கிறார்…அதனால், மத தவணையில் விலை வுயர்ந்த பைக் ஐ வாங்குகிறார்.. காதலியை கரம் பிடிக்கும் வேளையில், அதாவது திருமணத்தன்று EMI யில் கார் வாங்கி தருகிறார். சந்தோஷமாக குடும்பம் நடத்தும் சில நாட்களுக்குள் சிவ வின், வேலை போய் விடுகிறது. இதனால் சிவாவால் மாத தவணை சரியாக செலுத்த முடியவில்லை. EMI தந்த பைனான்ஸ் கம்பெனிகாரர்கள் சிவாவை நெருக்க, விஷயம் வீடு வரை செல்கிறது..பைக் EMI தந்த நிறுவனமும், கார் EMI தந்த நிறுவனமும் தங்கள் அடியாட்களை வீட்டுக்கு அனுப்பி சிவாவின் மனைவியையும், அம்மாவையும் அசிங்கமான வார்த்தைகளை பேசி அவமானப்படுத்த, சிவா குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த மன உளைச்சலால் சிவாவின் அம்மா விபத்துகுள்ளாகிறார். அம்மாவின் சிகிக்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் சிவாவிற்கு, சாய் தன்யாவின் அப்பா பேரரசு உதவி செய்ய, அந்த பணம் அக்கவுண்ட்டில் வந்தவுடன், ஆட்டோபே யில், கம்பேனிகாரர்களுக்கு சென்று விட, தவிக்கும் சிவ வின் அம்மா பிழைத்தாரா? சிவா கடனில் இருந்து எப்படி மீண்டார் என்று சொல்கிறது இந்த படம்.
நடுதட்டு வாலிபானாக நடித்திருக்கும் சதாசிவம், சரியான கதையை தேர்ந்தெடுத்து, இயக்கி நடிக்கவும்செய்திருக்கிரார்..தவணை கட்ட முடியாமல் தவிக்கும் இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்..
இரண்டு நாயாகி களில் ஒருவராக பார்த்த சாய் தான்யா, தனித்து தெரிகிறார்..நடிப்பிலும் அசத்தியுள்ளார்.
செந்தில்குமாரி, பிளாக் பாண்டி, பேரரசு ஆகியோர் குடுத்த கதாபாத்திரத்தை செய்துள்ளனர்..
நம் வாழ்வில் நடக்கும் யதார்த்தத்தை கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.. ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சக்திக்கு மீறி, EMI இல் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்களுக்கு சொல்லும் பாடம்..