அஜித்தின் ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் நடிக்க தற்போது வெளியாகி இருக்கும் படம் Good Bad Ugly (GBU)

அஜித் உடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்கும் நிலையில், பிறந்த தன் குழந்தை யை பார்க்க, செல்கிறார்.., நீ ஒரு கே ங்ஸ்டர், அதை விட்டு விட்டு வந்து என் குழந்தை யை தொடு என்று சொல்ல, தன் மனைவி திரிஷா வால் தடுக்கப்படுகி றார்..

இதனால் அஜித் போலிஸிடம் சரண்டர் ஆகி, பழைய கேங்ஸ்டர் வாழ்கையை மறைத்து, 17 வருடம் கழித்து தன் மகனை பார்க்க வருகிறார்.
அப்படி பார்க்க வந்த தருணத்தில் அஜித் தின் மகன் சிறை செல்ல நேரிடுகிறது…அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள, விட்ட ஆயுத வாழ்கையை மீண்டும் கையில் எடுக்கிறார்.. அப்படி மீண்டும் கேங்ஸ்டர் ஆக மாறிய அஜித்
தன் மகனை ஜெயிலில் இருந்து மீட்டாரா இல்லையா ? என்ற 10000 வாலா சரவெடியே இந்த GBU…

அஜித், முற்றிலும், முக்காலு மாய் அஜித்…இந்த அஜித் தானே நீ கேட்ட னு, ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து செதுக்கி குடுத்திருக்காரு இயக்குனர் ஆதிக்..
படத்தில் பல ரெப்ரன்ஸ் கள் இருந்தாலும், வாலி அஜித் சூப்பர்…
அர்ஜுன் தாஸ், வில்லன்…தாங்குவாரா? என்ற கேள்விக்கு செம்ம, மாஸ் ஆக்சன்..சிறப்பான நடிப்பு…
த்ரிஷா,அவருக்கு அழுத்தம் இல்லாத கதை என்றாலும் குடுத்ததை நன்றாக செய்திருக்கிறார்…
தலைவி சிம்ரன், இடுப்பு பத்திரம் என்று அஜித் வாயாலேயே சொல்ல வைத்திருப்பது..இயக்குனரின் சாமர்த்தியம்..
இசை ஜி. வி.. வழக்கம் போல் மனுஷன் இசையில் வைப்..

மொத்தத்தில் Good Bad Ugly, ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களுக்காக வழங்கிய 10000 வாலா சரவெடி…