கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் அப்துல், தனது மகன்களை நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்…

பள்ளி ஒன்றை நிர்வாகித்து, வரும் அவரின் பிசினஸ் நொடிந்து போகவே, நிறைய பண இழப்பு ஏற்படுகிறது.

அதன் காரணமாகவே, வீட்டிற்கு தண்ணீர் வரி, மின்சார கட்டணம் முதற்கொண்டு செலுத்தாமல் இருக்கிறார் அப்துல்.

பிரிந்து போன அம்மா, கண்டிப்புடன் வளர்க்கும் தந்தை, , தந்தையிடம் டார்ச்சர் தாங்க முடியாமல் தவிக்கும் மூன்று குழந்தைகள் என
ஒரு உணர்வுபூர்வமான கதையை கையில் எடுத்து அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அவினாஷ் பிரகாஷ்

இயக்கியதோடு ஒளிப்பதிவும் சேர்த்து செய்திருக்கிறார்..
அப்பாவிடம் இருக்கும் போது டார்ச்சர் தாங்க முடியாமல் குழந்தைகள் தவிக்கும் போது டார்க் ஷேடில் காட்டப்படும் ஒளிப்பதிவும் ,
அம்மா வீட்டுக்கு ஒரு வாரம் வரும் குழந்தைகள் முகத்தில் மலர்ச்சியை காட்ட கலர்ஃபுல் பிரகாசமான ஒளிப்பதிவு என
வித்யாசப்படுத்தி காட்டியிருக்கிறார்
இயக்குனரின் திறமைக்கு, ஒளிப்பதிவுக்கு ஒரு சான்றாக விளங்குகிறது .

நாயகனாக நடித்திருக்கும் அஹமது ரஃபி கண்டிப்பான தந்தையாக நடித்துள்ளார்
பொருளாதாரத்தில்
வீழ்ச்சி அடைந்தவராக, மனைவியை புரிந்து வாழ முடியாதவராக குழந்தைகளுக்கு அன்பை செலுத்த முடியாதவராக, நடித்திருக்கிறார்
இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்

வரும் 18ஆம் தேதி படம் வெளியாகிறது