
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக சசிகுமார், சிம்ரன் தங்களது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு வர, அங்கே போலீஸ் அதிகாரி ரமேஷ் திலக் ஆல் மடக்கப்பட, பிறகு அவர்களது பரிதாப நிலை கண்டு ரமேஷ் திலக் விடுவித்து விடுகிறார்….இதற்கு நடுவில் ராமேஸ்வரத்தில் ஒரு பாம் பிளாஸ்ட், நடக்க அதனை நடத்திய சதி கார கும்பலை தேடுகிறது போலீஸ்..
சசிகுமார் தனக்கென்று ஒரு வேலையை தேடி கொள்கிறார். அந்த காலனியில் உள்ள அனைவருடனும் அன்னியோன்யமாக பழகி நல் உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர் சசிக்குமார் மற்றும் சிம்ரன்…
இந்த நிலையில், குண்டு வெடிப்புக்கான காரணம் யாரென்று தெரியாமல் இருக்கும் நிலையில், இலங்கையில் இருந்து வந்த சசிகுமாரின் குடும்பம் தான் காரணம் என போலீஸ் நினைக்க, அந்த குடும்பத்தை பிடிக்க தீவிரமாக இறங்குகிறார்கள்.
இலங்கையில் இருந்து பல கஷ்டங்களை கண்ணீருடன் சுமந்து வந்து, சென்னையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இந்த குடும்பத்திற்கு இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை..
குடும்பத்தின் ஆணிவேராக தன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சசிகுமார் – சிம்ரனின் மகன்களாக நடித்த மிதுன் மற்றும் கமலேஷ் இருவரின் நடிப்பு சிறப்பு. குறிப்பாக குட்டி பையன் கமலேஷ் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான் .
அதே போல் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகி பாபு, பகவதி, சுதர்ஷன், ரமேஷ் திலக் என அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் டூரிஸ்ட் ஃபேமிலி, யை பெஸ்ட் ஃபேமிலி ஆக ஆக்கி விட்டனர் ..