சைலேஷ் கோலனு இயக்கத்தில், நானி ஶ்ரீ நிதி ஷெட்டி, சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஹிட் 3.

போலீஸ் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் (நானி) விசாகப்பட்டினத்தில் ஒரு கொலை கேஸை விசாரிக்க, மறு பக்கம்,அந்த கொலையை அவரே செய்து வீடியோ எடுத்து ஒருவருக்கு அனுப்புகிறார்…. . அதேபோல் இன்னொரு கொலையை அவர் செய்யும்போது சக பெண் போலீஸ் அதிகாரி பார்த்து விட,,
அவருடன் சண்டையிட்ட அர்ஜுன், இந்த கொலையை ஏன் செய்கிறேன் என விளக்குகிறார்.

பிளேஷ்பேக்கில், அர்ஜுன் சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் வேலை பார்த்தபோது அங்கே ஒரு சீரியல் கில்லரை கைது செய்ய,
அவனிடம் விசாரணை நடத்தும்போதே பீகாரில் அதே பாணியில் கொலை நடக்க, அந்த கொலைகாரனையும் கண்டுபிடித்து ஒன்றாக விசாரிக்கிறார் அர்ஜுன்.
அப்போதுதான் ஒரு அதிர்ச்சிகர பின்னணி தெரிய வருகிறது. அதன் பின்னர் சீரியல் கொலைகளை செய்பவன் யார் என்று கண்டுபிடித்ததா ரா ?? என்பதே மீதிக்கதை…

அர்ஜுன் சர்க்காராக வரும் நானி எப்போதும், இறுக்க மான முகத்துடனே இருக்க, அவரை காதலிக்கும் காதலியாக ஶ்ரீநிதி ஷெட்டி..அழகாக வந்து போகிறார்.. .

சனு ஜான் வர்கீசின் ஒளிப்பதிவு அருமை. மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை யில் மிரட்டல்… படத்தின் முடிவில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவரின் என்ட்ரி, ஹிட் கேஸ் 4கிற்கு லீட் செம….
மொத்தத்தில், ஹிட் 3 , கற கற , இரத்தம்,,வன்முறை யை சிறிதளவு குறைத்திருந்தால், ஹிட் 3… சூப்பர் ஹிட்…