
தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயலட்சுமி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “என் காதலே”
இப்படத்தில் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்க, திவ்யா மற்றும் வெளிநாட்டு நாயகி லியா அகியோர் நடிசிருக்காங்க…
காரைக்கால் பகுதியில், ஊர்ப் பெரிய மனிதரான மதுசூதனன் மருமகன் லிங்கேஷ், கட்டுமரத்தில் சென்று மீன் பிடித்து குறைந்த கட்டணத்தில் வியபாரம் செய்யும் நல் மனசுக்கரான்..
வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள நாயகி லியா உள்ளிட்ட ஒரு குழு அங்கு வருகிறது.
அதற்கு உறுதுணை புரியவேண்டி ஊர்ப் பெரிய மனிதரான மதுசூதனன் ராவிடம் அந்தப் பகுதி பாதிரியார் கேட்க, அந்தப் பொறுப்பை தன்னுடைய மருமகன் நாயகன் லிங்கேஷிடம் கொடுக்கிறார் மதுசூதனன் ராவ்.
தொடக்கத்தில் லிங்கேஷி டம் வெறுப்புடன் பழகும் லியாவிற்கு போகப்போக அவரது மேல் காதல் வருகிறது…
ஏற்கனவே சுனாமியில் தன் தாய் தந்தையை பறிகொடுத்து, சிறுவயதில் நிற்கதியாக நின்ற லிங்கேஷை அவரது மாமன் மதுசூதனன் ராவ் எடுத்து சொந்தப் பிள்ளையாகவே வளர்த்து வரும் நிலையில் அவரது மகள் திவ்யா, லிங்கேஷ் மீது சிறுவயதிலிருந்தே கண்மூடித்தனமான காதல் கொள்கிறாள்…
இந்த இரண்டு காதல்களில் லிங்கேஷ் எதைத் தேர்ந்தெடுத்தார்… என்பதை முக்கோண காதல் கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயலெட்சுமி..
ஆரம்பத்தில் முரடாக தெரிந்த, லிங்கேஷ், மாமா பெண்ணிடம் பாசத்தையும், வெளி நாட்டு பெண்ணிடம் காதலையும் காட்டும் இடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்…
மாமா மாமா என மாமனே தன் உலகம் என நினைக்கும் திவ்யா தமிழுக்கு அழகான புது வரவு..
நமது கலாச்சாரத்தை காதல் கலந்து கொடுத்திருக்காங்க பெண் இயக்குனர் ஜெயலட்சுமி..