
சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் எழுத்தாளர் செல்வேந்திரன் வரவேற்றார். இப்படத்தின் இசையை இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு வெளியிட, இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், டி சிவா, தியாகராஜன், பி. எல். தேனப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள் .
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.
என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.
இமான் சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷனை இப்படத்தில் பார்க்கலாம்.தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை, படத்திற்காக அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு சற்று பொறாமையாக தான் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு ஸ்ட்ராங்கஸ்ட் பெர்சன். அவருக்காகவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என நம்புபவன். அந்த வகையில் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.
நடிகர் நவீன் ஒரு கதாபாத்திரத்திற்குள் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். கேரக்டரை எழுதும்போது திரையில் எப்படி தோன்றும் என்று நினைத்து எழுதுவதில்லை. ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவோம். படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மே 16 அன்று ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்,” என்றார்.