
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி,ராஜ்கிரன் சுவாசிகா, விஜி சந்திரசேகர் பால சரவணன் நடித்து வெளியாகி இருக்கும் படம் மாமன்.
சிறு வயது முதலே தந்தையை இழந்த சூரிக்கு அக்கா சுவாசிகா தான் உயிர். சுவாசிக்காவும் தம்பியை தன் அப்பா போல் பாவித்து பாசம் காட்டி வரும் பாசமிகு அக்கா.. சுவாசிகா விற்கு 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் அவரது குடும்பத்தாரும் சொந்த பந்தங்களும் அவரை காயப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், அவர் கரு உண்டு குழந்தையை பெற்றெடுக்கிறார்… அக்கா மகன் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை பொழிந்து வளர்க்கிறார் சூரி..கிளை கதையாக ராஜ்கிரனும் விஜி சந்திரசேகர் தாம்பதி யினரின் சின்ன சின்ன சண்டையோடு சேர்ந்த வாழ்க்கை..
இதற்கிடையில் ஐஸ்வர்ய லட்சுமியை காதலித்து மனம் புரிகிறார்.. பிறந்தது முதல் மாமனை பிரியாத நிலன், முதல் இரவு அன்றும் அவர்களுக்கு நடுவில் வந்து படுக்க அது பிரச்சனையாகிறது. அந்தப் பிரச்சினை உருவெடுத்து பெரும் சண்டையாக மாற, தனிக்குடுத்தனம் செல்கிறார்கள் ஐஸ்வர்ய லட்சுமியும் சூரியும்…
இது அக்கா சுவாசிக்காவிற்கு பெரும் கலக்கத்தை உண்டாக்க, அக்கா தம்பி பாசம் உடைகிறது.. மனம் உடைந்த அக்கா தம்பி சேர்ந்தார்களா? நிலன் மாமன் சூரி யிடம் சேர்ந்தனா?இல்லையா என்பதே மாமன் படத்தின் கதை..
குடும்பங்கள் போற்றும் கதாநாயகனாக மாறி இருக்கிறார் சூரி, அக்கா கருவுற்றதும் அவர் மீது காட்டும் அக்கறையில் இருந்து, குழந்தை பிறந்ததும் அக்குழந்தை மீது அதீத பாசம் காட்டுவதாக இருக்கட்டும், காதலி காதலை சொன்ன போதும் கூட புரியாது குடும்பத்து மேல் மட்டும் காட்டும் பாசத்தில், தன் நடிப்பினால் மிரள வைக்கிறார் சூரி..
தன் கதாபாத்திரத்தின் பொறுப்பை உணர்ந்து, ஓவர் ஆக்டிங் இல்லாமல், அளவான மீட்டரில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
சிறுவன் பிரகீத் சிவன், சேட்டை செய்யும் மருமகனாக, வாண்டு விடம் இருந்து நன்றாக வேலை வங்கியிருக்கிறார் இயக்குனரும் அப்பாவும் ஆன பிரசாந்த் பாண்டியராஜ்..
எதார்த்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் ராஜ்கிரனும் விஜி சந்திரசேகரும்
முதல் பாதி மாமன் மருமகன் சேட்டைகள் அக்கா தம்பி பாசம், காதல் கலகலப்பு என்று படத்தினை கொண்டு சென்ற இயக்குனர், இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுத்தடித்து பாச போராட்டத்தினை முடித்து வைத்திருக்கிறார்.
கூட்டுக் குடும்பங்களில் வரும் உறவு முறை சிக்கல்களை எடுத்து காட்டி இருந்தாலும், அதனை லாவாகமாக கையாண்டு, சில இடங்களில் மன்னிப்பு கேட்டு விட்டுக் கொடுத்துச் செல்வதே சிறந்த வாழ்க்கை என்று சொல்லியிருப்பதால், மாமன் குடும்பங்கள் கொண்டாடும் மாமனாக வருவது உறுதி…