ஆர்யாவின் தயாரிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கீதா திவாரி கௌதம் வாசுதேவ மேனன் கஸ்தூரி நிழல்கள் ரவி யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல்

வெள்ளித் திரையில் வெளியாகும் திரைப்படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து, ஆதரவாளர்களையும் அதே சமயம் ஹேட்டர்களையும் சம்பாதித்து வைத்திருப்பவர் கிசா 47 (சந்தானம்). படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்றும், எடுத்த படத்தினை விமர்சனம் என்ற பெயரில் தாறுமாறாக விமர்சிக்கும் நபர்களை வரவழைத்துக் கொல்லும் பேயாக செல்வராகவன்( ஹிட்ச்காக் இருதயராஜ் ).. அவ்வாறு விமர்சனம் செய்யும் விமர்சகரான கிசா வை கொலை செய்யும் நோக்கில்,தனது பாழடைந்த தியேட்டருக்கு வரவழைக்க, ஏதோ பொறி தட்டிய சந்தானம் திரும்பி சென்று விடுகிறார். நண்பர் மூலம், தனது குடும்பத்தாரும் தியேட்டருக்கு சென்று இருப்பதாக தகவல் கிடைக்க மீண்டும் தியேட்டருக்கு செல்ல… அதற்கு முன்பாகவே அவரது குடும்பத்தார் நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் ஆகிய மூவரும் தியேட்டரில் மாட்டிக் கொள்கின்றனர். அங்கு ஓடும் திரையில் அவர்கள் இழுக்கப்பட்டு, அப்படத்தின், கதாபாத்திரங்களாக மாறி உள்ளார்கள். அதில் சந்தானத்தின் காதலி கீதா திவாரியும் பேயாக இருப்பது தெரிய வருகிறது. அவர் ஏன் பேயாக மாறினார் என்பது தெரிய, திரைக்குள் ஓடும் படம் முழுவதுமாக முடிவதற்குள் காரணத்தை கண்டுபிடித்து தன் குடும்பத்தாரை மீட்டுவதே டிடி நெக்ஸ்ட் லெவல்.

சந்தானம் மொட்டை ராஜேந்திரன் காமெடி வேற லெவல், குறிப்பாக தாய்லாந்துக்காரர் பேசும்போது கீழே குனிந்து தேட, ஜிவிஎம் எதை தேடுகிறாய் என்று கேட்க சப்டைட்டில் என்று சொல்லுவது காமெடியான கட்டம். மேலும் கௌதம் மேனனை “உயிரின் உயிரே” பாடல் காட்சியில் சிரிப்பலை.. செல்வராகவன் ஜீவிஎம் இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

அதிக அளவில் ஸ்பூப் காட்சிகள் இருப்பினும் அது அத்தனையும் இடைவேளைக்குள் முடிந்து விடுகிறது… படத்தின் பின்பாதியில் நாமும் நான் திரைப்படத்திற்குள் நுழைந்து வெளிவர முடியாமல் சுற்றி சுற்றி வருவது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது..

ஆஃப்ரோவின் பின்னணி இசை காட்சியையும் மீறி கேட்கிறது… தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து

காமெடி ஜானருக்கான கதையை திகில் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.. DD Next level நெவெர் end என்பதால் கலகலப்பாக சிரித்து விட்டு வரலாம்.