ஆர் பாலா இயக்கத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின் நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜின் தி பெட்..

படத்தின் ஆரம்பத்திலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம் போல் ஜின் ஒன்றை மந்திரம் செய்து ஒரு பெட்டியில் அடைக்கின்றனர்.. மலேசியாவில் மியூசிக் பேண்ட் லோன் மலேசியாவில் மியூசிக் பேன் ஒன்றை வைத்து நடத்தி வரும் முகின் காதல் தோல்வியால் மனம் உடைந்து இருக்கும் வேளையில் அவர்கள் பெற்றோர்கள் சென்னைக்கு அழைக்க மலேசியாவில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறார்… தன் அக்கா மகனுக்கு கிஃப்ட் ஒன்றை கொடுக்க விரும்பும் முகின் ஜின் இருக்கும் பெட்டியை வாங்கிக் கொண்டு சென்னை புறப்படுகிறார்.. அந்தப் பெட்டியின் மேல் கை வைத்ததுமே முகினுக்கு பரிசுகள் விழ அது தனக்கு லக்கி என்று கருதி அந்த பெட்டியோடு வீட்டுக்கு வருகிறார்.. அவருக்கு பிடித்த அந்த ஜின்னை வீட்டில் இருக்கும் குடும்பத்தார்கள் வெறுக்க, அந்த ஜின் இருக்கும் பெட்டியை தூக்கி வெளியில் எரிகிறார். வெளியில் தூக்கி எறியப்பட்ட பெட்டியில் இருந்து எழும் ஜின்னுக்கு முழு உருவம் கிடைக்கிறது அதற்குப் பின் ஜின்னும் முகினும் சேர்ந்து என்ன செய்கிறார்கள் என்பதே கதை…

இந்த டைட்டிலை வைத்து இன்னும் சிறப்பாக கதை செய்திருக்கலாம்.. பட்டினத்தில் பூதம் என்ற படத்தின் கான்செப்ட் போல இது இருந்தாலும் அந்த பூதம் மக்களை ரசிக்க வைத்தது இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து இருந்தால் ஜின்னை வேறு விதமாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகள் ரசிக்கும் படியாக அழகான திரைக்கதையை அமைத்திருக்கலாம். இப்படத்தின் ஒரே ஒரு ஆறுதல் பால சரவணனின் நடிப்பும் சண்டை காட்சிகளும் மட்டுமே..எனினும் ஜின் இன் தி பெட் இந்தக் கால குழந்தைகளுக்கான திரைப்படம்..