
பல வெற்றி படங்களை கொடுத்த தங்கர்பச்சன் மகன் விஜித் பச்சன் நடித்து வெளியாகி இருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும்.
இயக்கம்- சிவப்பிரகாஷ் இசை – இளையராஜா
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மேலாண்மை செவிலியராக பணியாற்றும் விஜித் பச்சன் குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுகிறார்… அவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை போலீசார் விசாரிக்க சில அதிர்ச்சிகரமான விவரங்களை தெரிவிக்கிறார்.. அதனால் அவரை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி விசாரணை கைதியாக சிறையில் அடைக் கின்றனர்.. திட்டமிட்டு சிறைக்கு வந்த அவர் ஏன் திட்டமிட்டு சிறைக்கு வந்தார்?அதற்கான காரணம் என்ன?என்பதே “பேரன்பும் பெருங்கோபமும்”…
இளமை முதுமை என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப இருவேறு தோற்றத்தில் நாயகனாக விஜித் பச்சன். முதல் படம் என்பதாலேயே சிரமப்பட்டு நடித்திருக்கிறார்
மலையாள காதலியாக வரும் ஷாலி நிவேகாஸ் தன் பங்கிற்கு குறைவில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். களை யான முகம். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் தமிழில் ஒரு வலம் வரலாம்
ஒளிப்பதிவாளர் ஜெ.பி.தினேஷ் குமார் மாஹேவின் அழகைக் காட்சிப்படுத்திய விதம் அருமை…
இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்திற்கு ஆறுதல்
சாதீய வன்முறையைப் பற்றி எரியும் கோபத்துடன் பேச முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ். சிவபிரகாஷ்.
