
அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ்.
நாயகியாக நான்சி, ஸ்ருதி நாராயணன், டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்…
கதையின் நாயகன் ரங்கராஜ் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை டெலிவரிக்காக ஆட்டோவில் அழைத்துச் செல்லும் வழியில் கொலைகார கும்பல் ஒருவர் குத்தி கொலை செய்ய முயல தன் மனைவியை மருத்துவச்சியிடம் சேர்த்து விட்டு மகன் பிறந்ததும் அந்த சந்தோஷ செய்தியை காதில் கேட்ட பிறகு இறந்து விடுகிறார்.. பிறந்த மகன் தனது அம்மாவின் ஆசைப்படியே அவனும் போலீசாகிறான்.. போலீஸான ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் வைக்கிறார். கைதான ஒரு மணி நேரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவன் வெளியே வருகிறான். வெளியே வந்த வில்லன் ரங்கராஜனை பழிவாங்க அவனது மனைவியை கொன்று விட்டு செல்ல இதனால் மனமுடைந்த ரங்கராஜ் தன் மகளைக் காப்பாற்றி வில்லனை பழி வாங்குவதே கட்ஸ் . விவசாயம் பற்றிய மற்றொரு கிளைக் கதையும் உண்டு..
அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களிலும் இயக்குனர் ரங்கராஜ் நடித்திருக்கிறார்.. இரண்டு நாயகிகளோடு ஃப்ளாஷ் பேக் காட்சி மற்றும் பிரசண்ட் என்று மாறி மாறி வருவதால் கதைக்கான கவனம் சிதறுகிறது…
ஒளிப்பதிவாளர் மனோஜ் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருக்க…
ஜோஸ் ஃபிராங்க்லின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.