அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில்  பிரித்திவிராஜ் ராமலிங்கம்மைனா நந்தினி, ஜீவா சுப்பிரமணியம் , காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ்,பக்ஸ், வேல ராமமூர்த்தி,  போஸ் வெங்கட்  நடிப்பில் வந்திருக்கும் படம்.   

திருப்பூரில் பனியன் கம்பெனி  ஒன்றில் வேலை செய்து வரும்  பிரித்திவிராஜ் ராமலிங்கம்  நண்பர்களுடன் வாடகையை பகிர்ந்து ஒன்றாக வசித்து வருகிறார்.. தான் வேலை பார்த்து வரும் பணியன் கம்பெனியில் இன்னும் சம்பளம் பட்டுவாடா ஆகாததால் முதலாளியிடம் கேட்க அவரோ இவர் கன்னத்தில் அறைந்து மேனேஜர் பக்கம் நிற்கிறார். ஏழை பெண்ணிடம் மேனேஜர் தவறாக பழகியதால்   அதை தட்டிக் கேட்க போய் தன் சம்பளத்திற்கே அவமானப்பட வேண்டியதாக உள்ளது என்று அப்போதுதான் புரிகிறது.. ஒரு பக்கம் மனைவி சம்பளத்தை கேட்க, மறுபக்கம் தன் அம்மாவிற்கு மருந்துக்கு கூட பணம் அனுப்ப முடியவில்லை என்றும் தான் உழைத்த சம்பளத்தையே கூனி குறுகி கேட்க வேண்டியதாக இருக்கிறது என்று மனம் நொந்து போகிறார்.. இந்த மன உளைச்சலில் இருந்து தப்பிக்க அவர் மதுவை நாடுகிறார்…

மது போதையில் தன் கல்லூரி கால கனவு நினைவிற்கு வர, தான் காதலித்த பெண்ணிடம் காதலை சொல்லாமலே போனது நினைவுக்கு வருகிறது… இப்போது அப்ப பெண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருப்பது தெரிந்தும், நட்பாக குடிபோதையில் இரவு அப்பெண் வேணி (மைனா நந்தினி) க்கு போன்  செய்கிறார்… தான் பிறந்த நாள் அன்று கேக் ஒன்றை வாங்கிக் கொண்டு காதலி யின் வீட்டிற்கு  கேக் ஒன்றை வாங்கிக் கொண்டு   நள்ளிரவில் அவள் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். அவளின் கணவனோ அவனை திட்டி வெளியில் அனுப்பி போலீசுக்கும் சென்று கம்பளைண்ட் கொடுக்கிறான்…குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில் டென்ஷனோடு இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு (விஜய் முருகன்) இவனின் நிலையைக் கண்டு மேலும் கோபம் கொப்பளிக்கிறது.. அந்த வெறியில் பிரித்திவிராஜ் ராமலிங்கத்தை லட்டியால் சட்டை கிழிய வெளு வெளுவென்று வெளுத்து விட்டு செல்ல, பிரித்திவிராஜ் ராமலிங்கம் வாக்கி டாக்கி யோடு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஓடி விடுகிறான்… ஏற்கனவே குழந்தை கடத்தல் டென்ஷனில் இருக்கும் காவலர்களுக்கு இது பெரும் பிரச்சனையாகிறது… காவலர்கள் காணாமல் போன குழந்தையும் ஸ்டேஷனில் இருந்து தப்பித்த பிரித்விராஜ் ராமலிங்கத்தையும் கண்டுபிடித்தார்களா இல்லையா? என்பதும் அந்த டே (நாள் )அவருக்கு குட் டே ஆனதா? இல்லையா?என்பதே  கதை.. 

முதல் படம் என்பது போல் இல்லாமல்  தேர்ந்தெடுத்த நடிப்பை கொடுத்திருக்கிறார்
பிரித்திவிராஜ் ராமலிங்கம்

கார்த்திக் நேதா வரிகளில்   கோவிந்த் வசந்தா  இசையில் இரண்டு பாடல்கள்  அருமையாக கேட்கும் படி  உள்ளது


மதுவுக்கு அடிமையானவர்களின் மனநிலை , எதார்த்த படைப்பாக கொடுத்துள்ளார், இயக்குனர் என்.அரவிந்தன்.

கிளைமேக்ஸ் காட்சி உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டு அன்றைய நாள் அவருக்கு குட்டே வாக அமையும்படி காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு