விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அறிமுகமாகி ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி வெளிவந்திருக்கும் படம் வீழான்…

இவருடன் தேவதர்ஷினி முத்துக்குமார், சம்பத், விக்னேஷ், அபிநட்சத்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்..

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான சம்பத்தை நடு ரோட்டில் வைத்து வெட்டி சாய்க்கிறான் சிறுவன் சூர்யா… அதனால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான்… சம்பத்தின் மனைவியான வரலட்சுமி, அவனை கொல்ல தொடர்ந்து ஆட்களை அனுப்புகிறார். செல்லும் அத்தனை பேரையும் ‘துவம்சம்’ செய்து விடுகிறார், சூர்யா. ஒருகட்டத்தில் அவனை கொலை செய்ய அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஆள் வரவழைக்கப்படுகிறது.. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றுசேர்ந்து சூர்யாவை கொலை செய்ய திட்டம் போட்டு அதே சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார்கள்… சூர்யாவை கொலை செய்யும் எண்ணத்தோடு செல்லும் அவர்களின் எண்ணம் நிறைவேறியதா? இல்லை அவர்களையும் சூர்யா வீழ்த்தி ஜெயித்தாரா?என்பதே வீழான்…

ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்க சண்டையிடுகிறார் சூர்யா அதற்கான அதற்கான பயிற்சியும் முறையே பெற்று அக்காட்சியில் நடித்திருப்பது தெரிகிறது

சூர்யாவிற்கு அம்மாவாக வரும் தேவதர்ஷினி சிறப்பாக நடித்திருக்கிறார்.. காட்சிகள் குறைவே ஆனாலும் வரும் இடங்களில் தனது பார்வையாலேயே தெறிக்க விட்டிருக்கிறார் வரலட்சுமி…

இயக்குனர் ஸ்டண்ட் மாஸ்டர் என்பதினாலேயே ஸ்டன்ட் காட்சிகளுக்கு மட்டுமே மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்..

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் பெறுகிறது. சாம் சி.எஸ். இன் இசையில் பினிக்ஸ் வீழாமல் எழுந்து நிற்கிறது…