
ஊடகங்களின் பாராட்டுகளும், முன்னோட்டக் காட்சிகளின் சிறப்பான எதிர்வினைகளும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்துக்கு வணிக வட்டாரத்திலும் திரையரங்க உரிமையாளர்களிடமும் வலுவான வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இந்த அதிரடித் திகில் திரைப்படம் ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. சினிமா வட்டாரத்தில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த ஓப்பனிங்கை பெறும் என எதிர்பார்ப்பு வளர்ந்துவருகிறது.
துல்லியமான அணுகுமுறை, தரமான உள்ளடக்கம், மற்றும் பாணியை மதிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட கதை , இவை அனைத்தும் வெற்றிகரமான திரைப்படத்தின் ரகசிய சூத்திரம். ‘ஜென்ம நட்சத்திரம்’ குழு, அந்த சூத்திரத்தை கைவசப்படுத்தி விட்டது போலவே தெரிகிறது.
1981-ஆம் ஆண்டு வெளியான அதே பெயரைக் கொண்ட புரட்சிகரமான ஹாரர் படத்தின் நிழலை மீண்டும் கிளப்பும் வகையில், இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த பெயரின் பாரம்பரியத்தையும் மரியாதையுடன் வைத்திருக்க, இந்த படக்குழுவின் முயற்சி பாராட்டுக்குரியது. திகில் மற்றும் மர்மத்தின் கலவையில், படம் உற்சாகமூட்டும் கதையுடன், வகையைவிடாது இருக்க முயற்சிக்கிறது.
முன்னோட்டக் காட்சிகளும், ஊடக ப்ரீவியூ திரையிடல்களும் தற்போது படத்திற்கு மிக உயர்ந்த எதிர்வினைகளை பெற்றுத்தந்துள்ளன. இதனால் விநியோகஸ்தர்களிடையே பெரும் நம்பிக்கை உருவாகி உள்ளது. படம் மக்களை ஈர்க்கும் வகையிலும் , அவர்கள் நிச்சயமாக அனுபவிக்கக்கூடிய ஹாரர் தருணங்களை சினிமா திரையில் கொண்டுவரும் வகையில் அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
தமன் அக்ஷான் கதாநாயகனாக தீவிரமான பங்களிப்புடன் சிறப்பாக நடித்துள்ளார். மால்வி மாலோத்ரா, மைத்ரேயா, மற்றும் ரக்ஷா செரின் ஆகியோர் தங்களுடைய கதாப்பாத்திரங்களுக்கு சிறப்பாக உயிர் கொடுத்துள்ளனர். சிவம் மற்றும் அருண் கார்த்தி ஆகியோர் தங்கள் துணை வேடங்களில் ஆழமுள்ள நடிப்பை வழங்குகிறார்கள்.மேலும், காளி வெங்கட், முனிஷ்காந்த், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, யாசர் போன்ற மூத்த நடிகர்களின் இருப்பு, கதைக்கு உணர்ச்சி மற்றும் நம்பகத் தன்மையை சேர்க்கிறது.
டெக்னிக்கல் குழுவும் படம் வெற்றியடைய முக்கிய காரணியாக செயல்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, அதிரடித் திகில் தருணங்களை சிறப்பாக காட்டுகிறது. பின்னணி இசையும் சவுண்ட் டிசைனும் படம் முழுக்க ஒரு ‘மூட்’ உருவாக்கி, ஹாரர் சூழலை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. ரசிகர்களை ஒரு மர்ம உலகுக்குள் அழைத்துசெல்லும் இந்த படத்தின் கலை மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை பெரிதும் பாராட்டப்படுகிறது.
அமோகம் ஸ்டூடியோஸ் மற்றும் வெயிட்லாம்ப் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே. சுபாஷினி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம், உணர்வுகளைத் தூண்டும் பரிணாமத்துடன், கதையின் அடுக்குகள் மற்றும் சினிமாவுக்கான தைரியமான அணுகுமுறையுடன், ரசிகர்களை ஈர்க்கத் தயாராக இருக்கிறது.