
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாஸில் நடித்து வெளிவந்திருக்கும் படம் மாரீசன்…
சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார் தயாளன் (ஃபஹத் ஃபாசில்). ரிலீஸ் ஆகியும் திருந்தாமல் சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது திருட்டை தொடங்கி விடுகிறார். அப்படி ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு அதற்குள் திருட நுழையும் இவர் அந்த வீட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருக்கும் வேலாயுதம் பிள்ளையை (வடிவேலுவை) சந்திக்கிறார்
தனக்கு அல்சைமர் நோய் இருப்பதாகவும், தன்னை கட்டிப் போட்டு துன்புறுத்தும் தன் மகனிடம் இருந்து காப்பாற்றும் படி தயாவிடம் வேண்டுகோள் வைக்க, அவரைக் காப்பாற்றுகிறார் வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொள்ளும் தயா, அவருடைய ஏடிஎம் பின் நம்பரை தெரிந்து கொள்வதற்காக அவர் சொல்லும் இடத்துக்கு எல்லாம் பைக்கில் அழைத்துச் செல்கிறார். வேலாயுதம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தயாவால் அடைய முடிந்ததா? உண்மையில் வேலாயுதம் யார் என்பதே ‘மாரீசன்’ திரைக்கதை…
இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடித்ததை மறந்து சிறிதளவும் காமெடியில்லாமல் சீரியஸ் ஆக நடித்திருக்கிறார் வடிவேலு.. அதேபோல் கனமான பாத்திரம் பகத் பாஸிலுக்கு அதை கவனமாக கையாண்டு நடத்தி இருக்கிறார்..போலீஸாக வரும் கோவை சரளா, ஃபஹத்தின் அம்மாவாக வரும் ரேணுகா, சித்தாரா உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்தாலும் கவனத்தை ஈர்க்கின்றனர். நெகட்டிவ் ரோலில் விவேக் பிரசன்னா.. அவர் பங்குக்கு அவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்.. யுவன் சங்கர் ராஜா இசையும் பின்னணி இசையும் அருமை.. மொத்தத்தில் மாரிசன் அனைவரும் ரசிக்கும் படியான திரில்லர் ஜானர் படமாக அமைந்திருக்கு..