ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள அனிமேஷன் படம்”மஹாவதார் நரசிம்மா”

அசுரர்களான ஹிரண்யகசிபு, மற்றும் ஹிரண்யாக்ஷன் சகோதரர்கள் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை அடித்து உதைத்து துன்புறுத்தி நேரில் வராத ஒருவரை கடவுள் என்பதா? அந்த விஷ்ணுவை கண்டுபிடித்து அழிப்பேன் என சபதமெடுக்கிறார் ஹிரண்யாக்ஷன்

தன் அண்ணனிடம் ஆசி பெற்று பூமாதேவியை சிறைபிடித்து கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க தேவர்கள் அனைவரும் பிரம்மதேவனிடம் முறையிட விஷ்ணு, ஹிரண்யாக்ஷனுடன் சண்டையிட்டு அவரை கொன்று பூமாதேவியை மீட்கிறார்..

தம்பியை பறிகொடுத்த ஹிரண்யகசிபு தானே மூவுலகையும் ஆளும் கடவுள் என மாற பிரம்மனை நோக்கி கடும் தவம் இருக்கிறார். அதன் பலனாக எந்த மனிதனாலும், உயிராலும், ஆயுதத்தாலும் எந்த நிலையிலும் தன்னை கொல்ல முடியாத வரத்தை பெற்று மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்கிறார்.
அவரின் மகன் பிரகலாதானோ எந்நேரமும் விஷ்ணுவின் துதி பாடுகிறார். அதைக் கண்டு அவரது தந்தை இரண்ய கசிப்பு ஆத்திரம் அடைய அவனை கொல்ல பல்வேறு முறைகளை கையாளுகிறார்.. உயிருடன் இருக்க வேண்டுமென்றால் விஷ்ணுவை மறந்து இரு என்று எச்சரிக்கிறார்… இறைவன் விஷ்ணுவே தன் கதி என்று வாழும் பிரகலாதனுக்கு இறைவன் அருளினாரா என்பதே கதை..

ஒரிஜினல் வெர்ஷன் ஹிந்தி ஆக இருந்தாலும் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்து 2D, 3D படமாக வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் வசனங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. அதேபோல் பாடல்களில் வரும் வரிகளும் ரசிக்கும்படியாக உள்ளன.. நல்ல ஒரு புராணக் கதையை அனிமேஷன் வடிவில் கொடுத்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்