ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிக்க பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா அஜ்மல் ஜான்விகா யோகி பாபு ஆகியோர் நடித்த வெளிவந்த படம் அக்யூஸ்ட்

இசை – நரேன் பாலகுமார்

பிரபல அரசியல்வாதியை கொலை செய்ததால், புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்குக் கணகு (உதயா) என்கிற விசாரணைக் கைதியை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.. சென்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்களில் ஒருவராக (அஜ்மல் ) வேந்தன் இருக்கிறார்… அவ்வாறு சென்று கொண்டிருக்கையில் கணகை கொலை செய்ய ஒரு கூலிப்படை முயல்கிறது.. இதன் நடுவே போலி என்கவுண்டர் மூலம் கனகை போட்டுத் தள்ள போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து அஜ்மலுக்கு தகவல் வருகிறது… அவர்களிடமிருந்து உதயாவை காப்பாற்றினாரா அஜ்மல்? அக்குழைக்கு உதயாவிற்கும் என்ன தொடர்பு என்பதே “அக்யூஸ்ட்”

உதயாவின் கெட்அப் மற்றும் உடல் மொழி ஆகியவை கதைக்கு ஏற்ப கச்சிதமாக அமைந்திருக்கு…. காதலியோடு குத்தாட்டம் போடுவதிலும் சரி அடுத்த கட்டத்திற்கு சென்று காதல் தோல்வியால் குமுரும் இடத்திலும் தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

ஹீரோயின் ஜான் விகா அழகோடு சேர்ந்து, அவன் நடிப்பும் நம்மளை அடடா போட வைக்கிறது..

போலீஸ் அதிகாரியாக வரும் அஜ்மல் குடுத்த கதாபாத்திரத்தினை நிறைவாக செய்திருக்கிறார்..

நரேன் பாலகுமார் இன் இசையில் ஒரு பாடல் துள்ளல்.. மொத்தத்தில் அக்யூஸ்ட் ஒரு கைதியின் கண்ணீர் டைரி…