
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்க, ஒரு சமூகத்தினர் அவர்களை நிற்க விடாமல் இடையூறு கொடுக்க,அந்த தொகுதியில் காலம் காலமாக அந்த சமூகத்தினர் மட்டுமே பதவியில் இருந்து வருகின்றனர். அவ்வாறு இருக்க அந்த தொகுதியினை பட்டியலி னத்தவர் போட்டி போடும் தனி தொகுதியாக அறிவிக்கின்றனர் அப்படி புதிதாக நிற்கும் பட்டியலினத்தவர்களோடு போட்டியிட வேண்டுமா? என்ற கோவத்தில் அவர்களை எதிர்த்து எவர் தேர்தலில் போட்டியிடுகிறார்களோ அவர்களை கொலை யும் செய்கின்றனர். மேலும் ஊரில் பெரிய கலவரத்தை தூண்டி விடுகிறார்கள். இதனால் அந்த தொகுதி மீண்டும் பொது தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால், தலைவராக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே 15 ஆண்டுகளாக இருக்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்தொகுதி தனித் தொகுதியாக பட்டியல் இனத்தவர்களுக்காக என அறிவிக்க இம்முறை என்ன நடக்கிறது என்பதே கதை…
புதுமுக நடிகை மதுமிதா கதைக்கு ஏற்ப மண் சார்ந்த முகமாக தெரிகிறார்.. அதோடு அழுத்தமான கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்தும் இருக்கிறார்
ஒளிப்பதிவாளர் பிரவீன் கதைக்களத்தை அழகாக படம் பிடித்து காட்ட, ஹரி கிருஷ்ணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு வலு சேர்க்கிறது
இயக்குனர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் வந்திருக்கும் நாளை நமதே படம் இக்காலத்திற்கு தேவையான ஒன்று..