நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒலி வடிவமைப்பாளர் சரவணன், ‘சரிகம’ ஆனந்த், படத்தொகுப்பாளர் மதன், கலை இயக்குநர் வாசு, ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகர்கள் வினோத் முன்னா, குமரவேல், சிவா அரவிந்த், நடிகைகள் தாரிணி,  கவிதா, நாயகன் குமரன் தங்கராஜன், நாயகி பாயல் ராதாகிருஷ்ணா, இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தயாரிப்பாளர் கே. ஜி. கணேஷ், தயாரிப்பு நிர்வாகிகள் சீனிவாசன், ரவிக்குமார் ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.படத்தொகுப்பாளர், தயாரிப்பு நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் பேசுகையில், “எங்கள் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் நேரடியான இரண்டாவது படம் தான் ‘குமார சம்பவம்’. முதல் படைப்பு ‘யாத்திசை’. யாத்திசை திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழுமுதற் காரணம் ஊடகங்கள் தான்.  இதற்காக மீண்டும் ஒருமுறை ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘யாத்திசை ‘படத்தை போலவே இந்த ‘குமார சம்பவம்’ படத்திற்கும் மக்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் குமார சம்பவம் தரமான ஃபேமிலி என்டர்டெய்னர். இயக்குநர் பாலாஜி வேணுகோபால் அழகாக இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

நாயகன் குமரன் எங்களுடைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வருகிறார். அவருடனான சந்திப்பின்போது ஒரு முறை உங்களை வைத்து நிச்சயமாக திரைப்படத்தை தயாரிப்பேன் என வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் நிறைவேற்றி விட்டேன்.  

இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்