கவின், ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், மிர்ச்சி விஜய், பிரபு, விஜய் டிவி ஷக்தி, தேவயானி, ராவ் ரமேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் *கிஸ் *
நடன இயக்குனர் சதீஷி படத்தை இயக்கி உள்ளார்..

கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி மூலம் கவினுக்கு புத்தகம் ஒன்று கிடைக்க, கிடைத்த பின் காதலர்கள் முத்தம் கொடுத்து கொண்டால் அவர்களுடைய எதிர்காலம் தெரியவரும் என்ற விஷயம் கவினுக்கு தெரிய வருகிறது தெரியவருகிறது.

காதல் என்றாலே கடுப்பாகும் கவின், இந்த மகா சக்தியை வைத்துக்கொண்டு எதிர்படும் காதலர்களை பிரித்துக்கொண்டே இருக்கிறார். தான் யாரையும் காதலிக்க மாட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்கும் ஹீரோ கவின், ஒரு கட்டத்தில் ஹீரோயின் ப்ரீத்தியை காதலிக்க துவங்க, காதலி ப்ரீத்தி தனது காதலை தெரிவிக்க கவினுக்கு முத்தம் கொடுக்க முற்படுகிறாள். அப்போது எதிர்காலத்தில் அவள் இறந்து விடுவாள் என்பது தெரிய வருகிறது கவிதைக்கு… காதலை சொன்னால் தானே இறந்து விடுவாள் என நினைக்கும் கவிஞன் காதல் நிறைவேறியதா?? என்பதே மீதி கதை…

கதாநாயகன் கவின் தனது நடிப்பில் மெருகேரி இருக்கிறார்.. அதே போல் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி அழகிய நடிப்பில் மனதை கவருகிறார். இவர்களை தவிர்த்து விஜய் டிவி சக்தி, தேவயானி, ராவ் ரமேஷ் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தது.

நடன இயக்குனர் சதீஷ் நடனத்தில் மட்டும் இல்லாமல் கதை திரை இயக்கம் என பான்டஸி யோடு எமோஷனல் யும் கலந்து கொடுத்து மாஸ்காட்டி இருக்கிறார்