
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷான் நிகம், சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி, பூர்ணிமா மோகன் என பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பல்டி
பஞ்சமி கபடி குழுவை சார்ந்த ஷான் நிகம், சாந்தனு மற்றும் அவருடைய நண்பர்கள் நண்பர்கள் என மொத்தம் நான்கு பேர் கொண்ட குழு வாகிய அவர்கள் படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை செய்கின்றனர், அதில் இருந்து கதை தொடங்க ஆரம்பிக்கிறது..
பஞ்சமி, பொற்றாமரை இரண்டு கபடி டீம்-க்கும் எப்போதும் கடும் போட்டி நடக்கும் நிலையில், பொற்றாமரை டீமின் உரிமையாளரும் கந்துவட்டிக்கு பணத்தை விடும் பெரும் பணக்காரரான செல்வராகவன் தன்னுடைய டீம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பஞ்சமி டீமை தன் பக்கம் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்..
ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் வைத்திருக்கும் ஷோ பாய்ஸ் கபடி டீம்-ல் ஆட சம்மதித்திருந்த சாந்தனு பணத்திற்காக, நண்பர்களை கலந்தாலோசிக்காமல் சட்டென்று பொற்றாமரை டீமில் விளையாட சம்மதித்து விடுகிறார்…இதனால் வரும் விளைவுகளே பல்டி…
ஷான் நிகம் படம் முழுவதும், ஒரு வித எனர்ஜியோடு அடி தடி, சண்டை, காதல் என அத்தனை இடங்களிலும் மாஸ் ஆக நடித்து அசத்தியுள்ளார்… சாந்தனு-வும் மிடுக்கான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் கலக்கியுள்ளார், அதோடு படத்தில் நடித்த அனைவருமே தங்களால் முடிந்த சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்…
ஜி.மா வாக நடித்திருக்கும் பூர்ணிமா மோகன் நல்ல நடிப்பு.காதலுக்கு மரியாதை யில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான கோணத்தில் நடித்திருக்கிறார்…
இசை – சாய் அபாயங்கர், சண்டைக் காட்சிகளுக்கு ஏற்ப அவர் இசையும் பரபர என இருக்கிறது…
மொத்தத்தில் பல்டி சண்டைக் காட்சிகள் நிறைந்திருந்தாலும் ரசிக்கும் படியான படம்…