ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து ஏற்கனவே கன்னடத்தில் காந்தாரா வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ரிஷப் ஷெட்டிக்கு இணையாக ருக்மணி வசந்த் இப்படத்தில் நடித்திருக்கிறார்

மன்னராட்சி காலத்தில் அரசர்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் வணிகம் வாயிலாக ஏற்பட்ட மோதல்களை மையமாக வைத்து நகர்கிறது இப் படத்தின் கதை.

ஐரோப்பியர்களும் , அரேபியர்களும் இந்தியாவில் வனிகத்திற்காக வருவது, அதற்கு முன்
பாங்கரா பகுதியை சேர்ந்த அரசன் காந்தாரா பகுதியை தாக்கி அங்கிருக்கும் வாசம் மிகுந்த மசாலா பொருட்களை எடுக்க வர, அங்கே காந்தாராவை காப்பாற்றும் கடவுள் அவர்களை விரட்டியடிக்க
அங்கிருந்து தப்பித்த இளவரசர் இனி காந்தாரா பக்கமே போக கூடாது என்று முடிவெடுகிறார், இந்த நிலையில் காந்தாரா பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு ஒன்றில் புலி-யின் பாதுகாப்பில் ஒரு குழந்தை கிடைக்கிறது, அந்த குழந்தை பெர்மே(ரிஷப் ஷெட்டி). பெரியவனாகி கந்தாரா பகுதியை காத்து நிற்கிறான்.. காடுகளில் இருக்கும் பொருட்களை சுமந்து துறைமுகம் சென்று வணிகத்தை செய்கிறான். அதனை தடுக்க முயலும் ஆதிக்க வர்க்கத்தை முறியடித்து காந்தாராவை எப்படி காப்பாற்றுகிறான் என்பதே.. காந்தாரா சாப்டர் ஒன்..

இயக்குனரும் நடிகருமான ரிஷப்ஷட்டி பெர்மே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. கட்டுமஸ்தான உடலை கொண்டு காட்டுவாசியாகவும் அப்படியே அடுத்த காட்சியில் தெய்வம் அவர் உள்ளே இறங்கும் பொழுது தெய்வத்தன்மை பெற்றார் போல் உடல் மொழியுடன் சண்டைக் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருக்கிறார்..

அடுத்ததாக ருக்மிணி, அழகு, சிரிப்பு என அவர் பாட்டுக்கு வந்து போகிறாரே என்று நினைத்தால் கிளைமாக்ஸ்க்கு முன் அத களப்படுத்தி விடுகிறார்..

அப்படியே அந்த காலத்தை செட் ஒர்க்கில் வளைந்து ஓடும் தெருக்களையும் அதில் கட்டுக்கடங்காத தேரையும் நகர்த்தி, குறுக்கில் வணிகம் செய்யும் மனிதர்களையும் கொண்டு.. காட்சிகளை படம் பிடித்து பிரம்மாண்டப்படுத்தி இருக்கிறார்கள் . அதோடு VFX காட்சிகள் ஹாலிவுட் தரம்.

காந்தாராவின் கதை யும், கிளைமாக்ஸ் ம், நம் ஆழ் மனதில் அப்படியே பதிய, காந்தாரா சாப்டர் ஒன் இன் இசை, ஒளிப்பதிவு என அனைத்து டெக்னிக்கல் ஒர்க்-ம் நம்மிற்கு வியப்பை மட்டுமே கொடுக்கிறது…..