அறிமுக இயக்குநர் சாரங் தியாகு (நடிகர் தியாகு வின் மகன்)இயக்கத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் நடிப்பில் உருவாகி  வெளியாகியுள்ள படம் “ஆரோமலே”..

பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்துவிட்டு, காதல் என்றால் இது தான், இது போல் தான் தானும் காதலிக்க வேண்டும் என்று நினைத்து காதலை தேடி அலைகிறார் கதாநாயகன் கிஷன் தாஸ்.

பள்ளி மற்றும் கல்லூரி என தொடர்ந்து ஒவ்வொரு பெண்ணாக அவர் காதலித்து வந்தாலும், அவை யாவும் தனக்கான காதலாக  அமையவில்லை. காதல் உணர்வும்  உணரவும் வரவில்லை. இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் காதல் என்று ஒன்று இல்லவே இல்லை என சொல்லும் பெண்ணாக என்ட்ரி கொடுக்கிறார் கதாநாயகி ஷிவாத்மிகா…

Matrimony-ல் சீனியர் மேனேஜராக இவர் இருக்க, அவருக்கு கீழ் புதிதாக வேலைக்கு சேர்கிறார் கிஷன் தாஸ். ஷிவாத்மிகாவை பார்த்தவுடன் காதலிக்க துவங்கும் கிஷன், ஷிவாத் மிகா விரும்பாத வார்த்தைகளை பேச உறைந்துபோகிறார்.
இப்படி இருவரும் இரு துருவங்களாக இருக்கும், இவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது… இறுதியில் இருவர் இப்படி இருவரும் இரு துருவங்களாக இருக்கும், இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது? இருவரும் இறுதியில் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

கிஷன் தாஸ், மூன்று வித கால கட்ட நாயகனாக வே றியேஷன் தருகிறார்… நடிப்பும் சிறப்பு..
ஹர்ஷத் கான் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். நகைச்சுவை டைமிங்கில் பட்டையை கிளப்பியுள்ளார். பல இடங்களில் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றதே அவருடைய நகைச்சுவைதான், அவருக்கு வாழ்த்துக்கள்.

அதே போல் படத்தின் திருப்பு முனையாக வரும் விடிவி கணேஷ் கதாபாத்திரமும் நம்மை ரசிக்க வைக்கிறது.
“ஆராமலே” காதல் எசன்ஸ் கொஞ்சம் குறைவு…