
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், , நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் சிறை.
7 ஸ்க்ரீன் லலித் குமார் படத்தை தயாரிக்க அவரது மகன் அக்ஷய் குமார் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.. இவருக்கு ஜோடியாக அனீஷ்மா நடித்துள்ளார்
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே, கொலையாளி ஒருவனை கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு பேருந்தில் செல்கிறார் விக்ரம் பிரபு.. அக்கைதியோ விக்ரம் பிரபுவிடம் இருந்து தப்பித்து செல்ல முயலுகையில், தனது கையில் உள்ள துப்பாக்கியை வைத்து அந்த கைதியை சுட்டுவிட இறந்துவிடுகிறான். இதனால் விக்ரம் பிரபு மீதும், அவருடன் சென்ற மற்ற இரு போலீசார் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, 5 வருடங்களாக சிறையில் இருக்கும் அப்துல் ஐ நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. விக்ரம் பிரபு மற்றும் இரண்டு போலீசார் இணைந்து அப்துலை அழைத்து செல்கையில், உடன் வந்த போலீசாருக்கும், பொது மனிதன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட, அதனை தீர்த்து அவர்களுடன் விக்ரம் பிரபுவும், வந்த பேருந்தின் தடத்திற்கு செல்ல, அங்கு பேருந்து இல்லை… சுதா ரித்து மற்றொரு பேருந்து மூலம் முன்னால் சென்ற பேருந்து மடக்கி பிடிக்க.. அதில் கைதி அப்துல் இல்லை…தனியாக விடப்பட்ட அப்துல், போலீசின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். துப்பாக்கியோடு சென்ற கைதி அப்துல் என்ன ஆனார் அவரை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா?? அவன் செய்த குற்றம் என்ன?என்பதை மீதி கதை..
முதல் காட்சியில் தொடங்கி இறுதி வரை பதட்டத்துடன் வைத்திருக்கும் திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் சுரேஷ் ராஜகுமாரி.
விக்ரம் பிரபுவிற்கு மற்றும் ஒரு ஒரு சிறந்த படம்
அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் சிறப்பாக நடித்துள்ளார். முதல் படமாக இருந்தாலும் அதற்கான உடல் மொழியோடு, அதற்கான மெனக்கடலும் அவர் நடிப்பில் தெரிகிறது..
நடிகை அனிஷ்மா அனில்குமாரின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து விட்டது. காதல் காட்சிகளிலும், தனது காதலுக்காக போராடும் காட்சிகளிலும் அனிஷ்மாவின் நடிப்பு அபாரம்…
போலீஸ் ஸ்டேஷனில் மூணாறு ரமேஷ், ஒரு கைதி போலீசுக்கு ஜாமீன் தராண்டா என்ற கூறும் வசனம் அற்புதம்
நம்மிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மற்றவர்களுக்கு பலனளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கருத்தினை கிளைமாக்ஸ் இல் வைத்திருப்பது புத்திசாலித்தனம்…
