டான் பிக்சர்ஸ், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, அதர்வா,ஸ்ரீ லீலா நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் “பராசக்தி”

பர பரப்பாக தொடங்கும் முதல் காட்சி, ரயில் எரிப்பு போராட்டத்தோடு அறிமுகம் ஆகும் சண்டை காட்சி…

இந்தித் திணிப்புக்கு எதிராக போராடி வரும் குழுவின் தலைவன் செழியன் (சிவகார்த்திகேயன்). மத்திய சர்காரால் போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி (ரவி மோகன்) இவர்களுக்கு இடையே ஆன மோதலில் தன் நண்பனை இழக்கிறார் செழியன், அதனால் மனம் கலங்கி போன செழியன் போராட்டங்களை விடுத்து குடும்பத்தை கவனிக்க, ரயில்வே பணிக்காக இந்தி கற்க வேண்டும் என்ற சூழ்நிலை வரவே, வேலை வாய்ப்பிற்காக கற்க ஆரம்பிக்கிறார்…. இருந்தும் சாராளமாக பேச வராத காரணத்தால், வேலை வாய்ப்பினை இழக்கிறார்…

சில ஆண்டுகளுக்குப் பிறகு செழியனின் தம்பி சின்னத்துரை (அதர்வா) இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன் நண்பர்களுடன் ஈடுபட, தம்பியை தடுத்து நிற்க, இந்தப் போராட்டங்களை ஒடுக்க காவல் துறைக்கு 144 தடை உத்தரவை மத்திய அரசின் உதவியோடு மாநில அரசும் சேர்ந்து உத்தரவிடுகிறது…. இதனை அறிந்து தனது தம்பியையும் மக்களையும் காப்பாற்றினாரா??, மொழி எதிர்ப்பில், ஜெயித்தாரா? என்பதே மீதி கதை..

அமரனுக்கு’ பிறகு சிவகார்த்திகேயனுக்கு மிக முக்கியமான படம். வலுவான கதை…தேர்ச்சி பெற்ற நடிகராக அவருக்கு பேர் சொல்லும் மற்றொரு படம்.

முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரவிமோகன். படம் முழுவதும் வியாபித்து தனியே தெரிகிறார்… அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மிரட்டல். லெப்ட் ஹாண்ட் இல் நடிப்பினை அசால்ட்டாக டீல் பண்ணுகிறார்…

ஸ்ரீலீலாவுக்கு முதல் தமிழ் படம் இது. பல படங்கள் தெலுங்கில் நடித்திருந்தாலும், தமிழில் பேர் சொல்ல கூடிய படம். தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்கால் என சில மாநிலங்களில் இருந்து வரும் கேமியோ படத்தில் கா ட்சிக்கு ஏற்ப பொருந்தி உள்ளனர்…

குறிப்பாக 1965-ல நடந்த பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கதையில் கலந்து பதிவு செய்த விதம் சிறப்பு.

வரலாற்றுச் சம்பவங்களுக்கு நடுவே, இப்படி இருந்திருந்தால், எப்படி இருந்திருக்கும் என்று சித் தறிக்கப்பட்டு சில காட்சிகளை, அதை முடிந்த அளவு நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

ஒரு பெண் இயக்குனர் இரண்டு பெரிய நடிகர்களுக்கும் நியாயம் சேர்க்கும் வகையில் நேர்த்தியாக திரைகதை அமைதித்திருக்கும் லாவகத்திற்காக்காகவே அவரை பாராட்டலாம்… 3.5/5