
செல்ப் ஸ்டார்ட் ப்ரடக்க்ஷன் தயாரிப்பில்
ஆகாஷ் நடராஜன், ஜானகி, ஹரி, ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் நடிப்பில் கே.ஜே.சுரேந்தர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாய பிம்பம்
நாலு நண்பர்கள் சேர்ந்தால் என்ன பேசுவாங்க என்று ஆரம்பித்து ஜாலி யாக போகின்றது கதை….
கடலூரை சேர்ந்த ஹீரோ ஆகாஷ், சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார். அப்படி சிதம்பரம் செல்லும் வழியில் பேருந்தில் ஒரு பெண்ணை பார்க்க அவர் மேல் நாட்டம் அதிகரிக்கிறது.. அவரைக் காண அதிவேகமாக ஓடும் நேரத்தில் ஒரு சிறிய விபத்து ஏற்படவே ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.. அங்கே எதிர்பாராமல் நர்ஸ் ஆக பணியாற்றும் தான் பார்க்க விரும்பிய ஜானகியை தற்செயலாக சந்திக்கிறார். தன்னை அறியாமல் ஜானகியின் வரவை எதிர்பார்க்க ஜானகியும், சில அர்த்தமில்லாத சாக்கு போக்கினை கூறி அவரை சந்திக்கிறார். நண்பர்களின் தவறான ஆலோசனை வழி நடத்தலால் ஜானகியை தனிமையில் சந்திக்க செல்கிறார் அதற்குப் பிறகு என்ன நடக்கின்றது என்பதே கதை…
ஹீரோ ஆகாஷ் பக்கத்து வீட்டு பையன் மாதிரி களையான முகமாக இருக்கிறார். அவரின் பேச்சு, ஜானகி யை காண துடிக்கும், தவிப்பு,எல்லாமே அவரது நடிப்பால் அழகாக்கி கொடுத்துள்ளார்
ஹீரோயின் ஜானகி, அவரின் கண்கள் பேசகிறது… சிதம்பரம் ஊர் கார பெண்ணாகவே தெரிகிறார்… பற்கள் தெரிய சிரிக்கும் சிரிப்பு, வெள்ளந்தி பார்வை என அத்தனையையும் அவருடைய நடிப்பில் தருகிறார்..அத்தனையும் ரசித்து பார்த்திருக்கும் நாம் கண்களால் கிளைமாக்ஸ் காட்சி யை பார்க்கும் போது மனம் தளருகிறது…
ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள், அவர்களின் அந்த வயது கேற்ப நடிப்பினை கொடுத்துள்ளனர்…
காதலிக்கும் நபர் நண்பர்களின் பேச்சால், சில நொடி தடுமாறினால் என்ன நடக்கும் என்பதனை காட்டி இருக்கிறார் இயக்குனர்
சிதம்பரம், கடலுாரை நேர்த்தியாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின். நந்தா இசையும் கதைக்கு பிளஸ்தான்.
மாய பிம்பம் ஒரு அழகான காதல் கதை
