
மலையாளத்தில் ‘மட்டி’ என்ற வெற்றி படத்தை இயக்கிய பிரகபால் தற்போது இயக்கி வெளிவந்திருக்கும் படம் ஜாக்கி (Jockey)…
யுவன் கிருஷ்ணா, ரிதன்கிருஷ்ணா, அம்மு அபிராமி, மதுசூதனன் ராவ், ஆகியோர் நடித்துள்ளனர்…
மதுரையில் உள்ள ஒத்தகடை பகுதியில் கிடா சண்டை பிரபலமான ஒன்று… இதில் வெற்றி பெரும் கிடா உரிமையாளருக்கு ‘ஜாக்கி’ என்ற பட்டம் கொடுத்து கெளரவிக்க படுகிறார்கள்…இந்த கிடா சண்டையில் பிரபலமாக இருக்கும் கார்த்தி, கிடா வளர்த்து கிடா சண்டை பந்தயத்திற்கு விடுகிறார். ஒவ்வொரு முறையும் கார்த்தி வளர்க்கும் கிடாவுக்கே வெற்றி கிடைக்கிறது. இதனால் இறுமாப்புடன் இருக்கும் கார்த்தி ஒரு நாள் மதுரையில் வழக்கம் போல் கிடா சண்டை யில் இருக்க, அவரின் கிடாக்கு போட்டியாக ஷேர் ஆட்டோ ஓட்டும் ராமர் என்பவர், தான் வளர்க்கும் காளி என்ற பெயர் கொண்ட கிடாவை சண்டையில் இறக்குகிறார். அந்த சண்டையில் காளி வெற்றி பெறுகிறது…
ராமருக்கும் ஜாக்கி பட்டம் கிடைக்கிறது. இந்த தோல்வியை தாங்கி கொள்ள முடியாத கார்த்தி, ராமருக்கும் அவர் குடும்பத்திற்கும் பல இன்னல்களை கொடுக்கிறார்…கிடா சண்டை தனிப்பட்ட இரு மனிதர்களின் ஈகோவாக மாறி மோதலாக உருவெடுக்கிறது. இந்த மோதல் அவர்களை எதுவரை கொண்டு செல்கிறது என்பதே “ஜா க்கி”
ஆட்டோ டிரைவராக வரும் யுவன் கிருஷ்ணா தோற்றத்தில் கரடுமுரடாக தெரிந்தாலும், மதுரை ஸ்லாங் பேசி கிடா வுடன் அன்பாக பழகி நடித்துள்ளார்…
வில்லனாக நடித்து இருக்கும் ரிதன் கிருஷ்ணா, கிடா சண்டையில் வரும் வன்மத்தை தன் மகா பாவனையில் வெளிப்படுத்திஇருக்கிறார்..
ஹீரோ அக்காவாக வரும் சரண்யா ரவிச்சந்திரன் வழக்கம் போல் தன் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மு அபிராமி காதல்காட்சிகளில் ஓகே..
என்.எஸ். உதயகுமார் மதுரை மண்ணை அழகாக படம் பிடித்துள்ளார்.. கிடா சண்டையின் படப்பிட்டிப்பு அற்புதம்..
சக்தி பாலாஜி இசையில் பின்னணி ஓகே.
மதுரை மன்னிற்கான கதை களம் கொண்டு, அருமை யான திரைக்கதை கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரகபால்
