
செளந்தர்யா ரஜினிகாந்தின் Zion நிறுவனமும் குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தயாரித்த எம். ஆர். பி. என்டர்டைன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வித் லவ்’
அபிஷன் ஜீவிந்த், அனஸ்வராராஜன் இனைந்து நடித்துள்ளனர்…
இயக்கம்- மதன்,
இசை – ஷான் ரோல்டன்
சத்யாவுக்கு (அபிஷன் ஜீவிந்த்) பெண் தேடும் படலத்தில் ஒரு பெண்ணை அதாவது சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) பார்க்க அனுப்புகின்றனர்.
முதலில் அறிந்து கொள்ள வில்லை எனினும், பிறகு திருச்சியில் இருவரும் ஒரே பள்ளியில் படித்திருந்தது நினைவுக்கு வர, அவர்கள் இருவரும் அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு நபர்களை காதலித்து வந்திருந்தனர். அதன் கதையை இருவரும் சொல்லி முடிக்க பின்னர், மோனிஷா, நாம ஏன் நம்மளோட ஃபர்ஸ்ட் லவ்வை கண்டுபிடித்து புரபோஸ் பண்ணக் கூடாது என சொல்ல, சின்ன வயசு காதலை, காதல் சொல்ல புறப்படுகின்றனர்… அதன் பின் வருகின்ற ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் தான் வித் லவ்…
அபிஷன் ஜீவந்த் தன் முதல் படத்திலேயே பலவித முதல் காதல், ஏக்கம், மோதல் என பல விதமாக நடித்து முத்திரை யை பதித்துள்ளார்…பள்ளி மாணவன், அடுத்து திருமணத்திற்கு பெண் தேடும் ஆண் என்று வே ரியாஷன் கொடுத்துள்ளார்
முஸ்லீம் மாணவியை யாக வரும் அனிஷா (காவ்யா அணில்) நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
அனஸ்வரா ராஜன், வரும் காட்சிகளில் அனைத்தும் அழகு, துள்ளல் கலந்த நடிப்போடு நம் அனைவரையும் அப்படியே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.. அத்தனை எனர்ஜி..
பள்ளி கால மலரும் நினைவுகளை அனைவரும் ரசிக்கும் படி கொடுத்துள்ளார் இயக்குனர் மதன்.
