ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.

யோகேஷ்வரன் பேசியதாவது..,

என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக  காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது.., 

“செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.

பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.

நடிகை சங்கீதா பேசியதாவது.., 

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்

திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.

 ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.