கார்த்திக் சுப்புராஜ், இன் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ மற்றும் ராணா தயாரிப்பில் இலங்கையை சார்ந்த சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “நீளிரா”

1988ல் இலங்கையில் போர் நடந்த போது அதில் ஒரு குடும்பம் சிக்கிகொண்ட கதை யை தழுவி எடுக்கப்பட்டுள்ளது…

இலங்கையில் 1988-ல் ஒரு தமிழ் குடும்பம் தங்கள் மகள் திருமணத்திற்கு தயாராக வருகிறது, அந்த சமயத்தில் அந்த பகுதியில் போராளிகள் தாக்குதல் நடக்க போகிறது என்பதை அறிந்த இந்திய ராணுவத்தினர் சிலர் அங்கு வருகின்றனர்.

எங்களால் உங்களுக்கு ஏதும் பாதிப்பு வராது என கூறிவிட்டு, வீட்டின் வெளியே தோப்பில் மறைந்து கொள்கின்றனர், இதற்கிடையில் சண்டை வேறு இடத்தில் நடக்க இவர்கள் வந்த இடம் தவறு என்றும், தங்களின் பாதுகாப்பிற்காக அந்த வீட்டிற்குள் நுழைகின்றனர்.. ஏற்கனவே போர் பதற்றத்தில் இருக்கும் அவர்களின் குடும்பம் ராணுவ வீரர்களை எப்படி சமாளிக்கிறது என்பதே மீத கதை…

அம்மாவாக நடித்திருக்கும் கபிலா வேணு வின் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிய, அற்புதமாக நடித்துள்ளார்… நடித்த அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி அற்புதமாக நடித்துக் கொடுத்துள்ளனர்..

அமைதிப்படை குழுவின் கேப்டனாக வரும் நவீன் சந்திரா, அவசரமில்லாமல் நிதானமாக யோசித்து எடுக்கும் ஒவ்வொரு செயலும்…. இயக்குனரின் திரைக்கதை க்கு ஒரு முத்தாய்ப்பு…

அந்த காலத்தில் நடந்த போர் பதற்றங்கள், அதற்கு நடுவே நடக்கும் சில நல்ல விஷயம், அதனை நடத்த படும் பாடு, இறுதியில் அதுவும் முடிவல்ல என்பது நமக்கு புதிதாக வே உள்ளது…

1988 இன் இலங்கை அரசியல் நிலவரம், களம் நிலவரம் அறிந்தவர்களுக்கு நீளிரா சொல்லும் சேதி புதிதாக இருக்கும்

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் பிரமாதம். நீளிரா நாம் மனதில் நீங்கா இடம் பெற்ற படம்…