லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரித்துக் கதாநாயகனாக
நடித்திருக்கும் படம் “லீடர்”

இவருடன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால் , பாகுபலி பிரபாகர்,அம்ரிதா ஐயர், வி டி வி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்..

இயக்கம் – ஆர் எஸ் துரை செந்தில்குமார்
இசை. – ஜிப்ரன்

தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மாபெரும் தாதா (பாகுபலி பிரபாகர்) ஒருவனின்  கார்களை ரிப்பேர் செய்யும் மெக்கானிக் ஆக லெஜெண்ட் சரவணன் இருக்கின்றார்.. ஓனருக்கு (வீ. டி. வி கணேஷ் )சொந்தமான  வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சரவணனுக்கு மகள் (இயல்)ஐ வளர்த்து கொண்டு வருகிறார்… இந்நிலையில்
ஒரு பெரிய கடத்தல் கும்பலின் தலைவன் ( சந்தோஷ் பிரதாப்) ஒரு ஆபத்தான வெடிமருந்துக்கான மூலப் பொருளை தூத்துக்குடி  துறைமுகத்தின் வழியே கடத்த முயல்கிறான். அதைப் பற்றி  தகவல் அறிந்த பெண் போலீஸ் அதிகாரி (ஆண்டிரியா),   ஹார்பருக்குள் இயல்பாகப் போய்வரும் சக்திவேல் மூலம்  உண்மையை வெளிக்கொண்டு வர முயல்கிறாள். சக்திவேலின் மகளைக் கடத்தி பெண் போலீஸ் அதிகாரி அதை சாதிக்க, ஒரு நிலையில் தான் தான் சக்திவேல் விரித்த வலையில் சிக்கி இருப்பது தெரிய வருகிறது.  தெரிந்த பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை

ஹீரோ சரவணன் நடிப்பில் முன்னேறி இருக்கிறார். சண்டை காட்சிகளில் பர பரப்பிற்கு பஞ்சம் இல்லை..இருக்கமான முகத்தோடு, கதைக்கு தேவையான அளவிற்கு மட்டுமே அவரை மிக சரியாக பயன்படுத்தி இருக்கிறார் துரை செந்தில்குமார். 

பாயல் ராஜ்புத் அழகாக தெரிகிறார்.. இயல் நடிப்பு அபாரம்..

வெங்கடேஷ் ஒளிப்பதிவு  படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜிப்ரானின் இசை கதை களத்தை மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது…

மொத்தத்தில் லீடர் தரமான ஆக்க்ஷன் திரில்லர்…