
கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி, தம்பிராமையா, எம். எஸ். பாஸ்கர், இளவரசு, ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “TN 2026” தங்க நட்சத்திரம்..
குல்கந்த் குமார்(நட்ராஜ்) வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து ஒரு பெரிய நடிகராகிறார்.. பார்த்த முதல் நாளிலிருந்து, இவர் வருங்காலத்தில் தமிழகத்தில் பெரிய இடம் பிடிப்பார் என்று நம்பிக்கையுடன் அவருக்கு பக்கபலமாக நிற்கிறார் அவரின் நலம் விரும்பி மற்றும் அண்ணனாக கருதும் தம்பி ராமையா.. கோடீஸ்வரர் ஆன தம்பி ராமையா நட்ராஜ் வளர்ச்சிக்காக தன் சொத்தை விற்று, பல படங்களை தயாரிக்க அவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆகிறார்.
தன் ரசிகர் மன்றத்தை எல்லாம் மக்கள் மன்றமாக மாற்ற, அவருக்கு இருக்கும் பெரும் புகழை தன் வசமாக்கிக் கொள்ள அரசியல் பெரும் புள்ளிகள் நினைக்கின்றனர். அரசியல் மற்றும் பல பணக்கார முதலைகளின் நெருக்கடியால்
மனம் கொந்தளித்து குல்கந்த் குமார் ( நட்ராஜ்) புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார், 2026-ல் முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்க, அது நடந்ததா இல்லை யா? என்பதே மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி குல்கந்த் குமார் எப்படி வளர்ந்து உச்சம் தொட்டு, அரசியலுக்கு வருகிறார் என்பதை விறுவிறுப்பாகவே செல்ல, இரண்டாம் பாதி யில் தற்போது நடக்கும் சில அரசியல் நிகழ்வுகளை கொண்டு திரைக்கதை அமைந்துள்ளது..
நாயகன் நட்ராஜிற்கு அவர் நடித்த படங்களிலேயே இது ஒரு மைல் கல்லாக அமைந்த படம்.. ஒரு நடிகரின் ஆரம்ப கால வாழ்க்கை முறையும், வளர்ந்து.. நடிகர் அந்தஸ்து பெற்ற பின், அவருக்குள் எழும் மாற்றத்தினையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்… ஒரு சாயலில் நம் மனதில் எந்த நடிகரின் பிம்பத்தை நினைக்கிறோமோ அதே போல் தோன்றுவது தான் சிறப்பு… அதிலும் இடைவேளையில் போலிஸ் தடுக்க அவர் இறங்கி நடந்து வரும் காட்சி… நம் மனத்திரையில் பல நிகழ்வுகளை நினைக்கத் தோன்றுகிறது…
கதாநாயகியாக நடித்திருக்கும் ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் திரைக்கதைக்கேற்ப பயன்பட்டிருக்கிறார்கள்.
தந்தையின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்க்கிறார் உமாபதி ராமையா.
இசை – தர்புகா சிவா
மொத்தத்தில், ’TN 2026’ அரசியலை நையாண்டியுடன் குடுத்து நம்மை சிந்திக்கவும் வைக்கிறது.. ஜாலியாக ரசித்து விட்டு வரலாம்.. 4/5..
