
டாக்டர்.ராஜசேகர், ஷர்வானந்த், மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பைக்கர்”..
இயக்கம் – அபிலாஷ் ரெட்டி கங்காரா.
இசை- ஜிப்ரான்
2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் கதையில் விகாஸ் நாராயண் (ஷர்வானந்த்) Motokart நடத்தி வருகிறார். காதல் மனைவி அனன்யா (மாளவிகா நாயர்), பள்ளியில் படிக்கும் மகன் இஷான் என சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் வேளையில், ING நிறுவனத்தில் மோசடி செய்துவிட்டதாக சுனில் நாராயண் (டாக்டர். ராஜசேகர்) வெளியேற்றப்படுகிறார். அதனை அறியும் விகாஸ் தன் அப்பாவின் மானத்தைக் காப்பாற்ற பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேஸிற்கு செல்கிறார்.
அதில் அவர் வெற்றி பெற்றாரா? மகன் மேல் கோபத்தில் இருக்கும் சுனில் அவரை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதக்கதை
நாயகன் ஆக சர்வானந்த் பிரமாதமாக நடித்திருக்கிறார். பைக்கர் கதாபாத்திரத்திற்கான அவரது பாடி பிட்னெஸ் இல் அவரின் மென க்கெடல் வியக்க வைக்கிறது..
நாயகனின் அப்பாவாக இது தாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகர் நடித்திருக்கிறார். இன்னமும் அதே மிடுக்கான தோற்றம்…நல்ல நடிப்பு.
நாயகி ஆக மாளவிகா நாயர், இதுவரை பார்த்திராத இளமைத்துள்ளலுடன்
பைக் இன் வேகத்திற்கு ஏற்ப, ஜே. யுவராஜ் இன் ஒளிப்பதிவு வேகம்… அற்புதம்…
ஜிப்ரானின் இசையில் 6 பாடல்கள்.. பின்னணி இசை கலக்கல்.
ரேஸ் உடன் கொஞ்சம் எமோஷன் ஐ கலந்து கொடுத்துக்கிறார் இயக்குனர்…
