
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க,
விக்னேஷ் ராஜாவின்
இயக்கத்தில் தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், மமிதா பைஜு,கருணாஸ் நடித்து வெளிவந்திருக்கும் படம் ” கர “
இசை – ஜி.வி.பிரகாஷ்
கதை 90 கால கட்டத்தில் நடப்பதாக காண்பிக்க படுகிறது..
ஆரம்ப காட்சியே விறு விறுப்புடன் தொடங்குகிறது…கிராம ப்புற வங்கிகள் அப்பாவி விவசாய மக்களை வட்டி என்கின்ற பெயரில் புதிது புதிதாய் செய்யும் கொடுமைகளை அப்பட்டாமாய் காண்பித்துள்ளனர்.. விவசாய மக்களை காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் வங்கி அவர்களுக்கு கடன் கொடுத்து, பின் வட்டி என்கின்ற பெயரில், புதிது புதிதாய் பெயர் சொல்லி, வட்டி வசூலி த்து நம்மிடமிருந்து பிடுங்கியதை, நமக்கே திருப்பி வாங்கி (கொள்ளை) தருகிறார் கதாநாயகன் கரசாமி(தனுஷ்)…
சிறப்பான திரைக்கதை அதனைத் தொடர்ந்து தனுஷின் அபாரமான நடிப்பு..ஒற்றை மனுஷன் தனுஷ் தனது சிறப்பான நடிப்பால் படம் முழுவதையும் தாங்கிச் செல்கிறார்…
உச்சகட்ட பரப்பில் இடைவேளை கொள்ளைக் காட்சி..
கே.எஸ். ரவிக்குமார், மற்றும் கருணாஸ் இன் எதார்த்தமான நடிப்பு அபாரம்…
ஜி.வி யின் பின்னணி இசையில் – “வாயா என் கரசாமி ” பாடல் மெய்சிலிர்க்க வைக்கின்றது..தனுஷ், ஜி.வி.. இருவரும் படத்திற்கு முக்கிய தூன் கள்…
பிருத்வி, ஜெயராம், சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் மமிதா அனைவரும் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்
விக்னேஷ் ராஜா தனது எழுத்தால் ஈர்க்கிறார், தேனி ஈஸ்வர் -ன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிற்கு சிறப்புப் பாராட்டுக்கள்.
மொத்தத்தில், பார்க்க வேண்டிய ஒரு கிராமப்புற கொள்ளைத் திரில்லர் 4.5/5
