‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம்.
இந்த மேடையில் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
முதலில் யுவராஜ், நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.
என்னுடைய உதவி இயக்குநர் காலத்திலிருந்து என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்களும், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தில் உருவாகியுள்ளது.

குறிப்பாக என் Associate Directors கார்த்திக் வீரபாகு, தினேஷ், ராஜன் மற்றும் முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பின்னால் அவர்களுடைய உழைப்பு மிகப்பெரியது.

சினிமா என்பது ஒரு கூட்டுப் பயணம். ஒரே ஒரு மனிதரால் ஒரு படம் உருவாகாது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.

சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடன் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

போஸ்டரில் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட அவர் ஒரு மிக இனிமையான மனிதர்.

என்னுடைய அன்பு சகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவும், ஒத்துழைப்பும் அளவிட முடியாதது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார். அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.

சுதர்சன் காந்தி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உழைத்ததால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தை அடைந்துள்ளது.
இயக்குநர் சசிகுமார் பேசியதாவது..,
“நான் நன்றி சொல்ல வரவில்லை… வாழ்த்து சொல்லத்தான் வந்திருக்கிறேன்.
‘அன்பே டயானா’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின்  டிரெய்லர் அற்புதமாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லுங்கள். அதுதான் உண்மையான நன்றியாக இருக்கும். அந்த வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

என்னுடைய நண்பர் சரவணன், இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார். இந்தப் படத்தில் அவர் பணம் முதலீடு செய்யவில்லை என்றாலும், தனது உழைப்பை முழுமையாக முதலீடு செய்திருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும். அதற்குரிய பங்கை தயாரிப்பாளர்கள் அவருக்கு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி. ‘ஜமா’ திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தில் அவரது நடிப்பும், படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட யதார்த்தமான படத்தை உருவாக்குவது எளிதான விஷயமல்ல. அந்தப் படத்தின் மூலம் ஒரு உண்மையான படைப்பாளி என்பதை நிரூபித்த அவர், தற்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ‘அன்பே டயானா’வை உருவாக்கியிருக்கிறார். இதிலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.
என்னுடைய நண்பர் யுவராஜ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி கதை கேட்டு முடிவு செய்தவர் அவர் தான்,  இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் நடித்துள்ள நாயகி ரம்யா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்.

இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.”
முன்னதாக  வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ‘அன்பே டயானா’, தற்போது டிரெய்லர் வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான
குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.