
விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி நடித்து வெளிவந்திருக்கும் படம் மகுடம்.
இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் விஷால்.
இசை ஜீ.வி பிரகாஷ் குமார்
படத்தின் தொடக்கம்1965இல் காட்டப்படுகிறது.சென்னையில் கடத்தப்பட்ட குழந்தையான விஷால் ரவுடி கும்பலால் பிச்சையெடுக்க வைக்கப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து விசாகப்பட்டினம் துறைமுகம் செல்லும் அவரை, ரவுடி கும்பலிடமிருந்து மற்றொரு பையன் காப்பாற்றுகிறான். அவன் உன்னுடைய ஆசை என்ன என்று கேட்க, நடுக்கடலில் கப்பலையே விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அச்சிறுவன் அந்த கப்பலையே வாங்கும் அளவு வளர வேண்டும் என சொல்கிறான். இருவரும் ஒன்றாக சேர்ந்து வளர, அப்படியே இன்னொரு பக்கம் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்யும் விஷால், தம்பி ராமையாவின் மகளான துஷாரா விஜயனை திருமணம் செய்து மகன் மகள் என்று குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.. மாமனாரிடம் தன்னிடம் கார் இருப்பதாக பொய் சொன்னதை சமாளிக்க கார் வாங்கத் தவிக்கிறார். மாத சம்பளம் ரூ.17500 வாங்கும் விஷால் ஒரு கட்டத்தில் கார் வாங்கி தனது குடும்பத்துடன் குன்னூர் செல்கிறார். அங்கு திடீரென ஒரு கும்பல் அவரது காரை சுத்துபோட்டு துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. இதில் துஷாரா விஜயனும், அவரது பெண் குழந்தையும் கொல்லப்படுகின்றனர். யார் அந்த கும்பல்? எதற்காக விஷால் குடும்பத்தைக் கொன்றனர்? இந்த விஷாலுக்கும், விசாகப்பட்டினம் விஷாலுக்கும் என்ன தொடர்பு? என்பதே மகுடம் திரைப்படத்தின் கதை.
அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஷால்.
இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி.. துஷாரா விஜயன் கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்
பிளாஷ்பேக் காட்சிகளில் அஞ்சலி வருகிறார். பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்டு அசத்துக்குகிறார்..
இளையராஜாவின் மென்மையான ‘முத்துமணி மாலை’ பாடலுக்கு ஆக்ஷன் காட்சிகளை வைத்திருப்பது அழகு. அதேபோல கிளைமாக்ஸ் காட்சிகளில் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள் வில்லன் டீமை அடித்து நொறுக்குவது பார்க்கப் புதிதாக இருந்தது..
போதை வஸ்து, துப்பாக்கி கடத்தல் என்று என்று சென்று கொண்டிருந்த தமிழ் படத்தின் கதைக்களத்தை மாற்றி சீனா வில் இருந்து வரும் போலி வாகன உதிரி பாக கதையை யோசித்து தந்ததற்கு இயக்குனர் விஷாலுக்கு பாராட்டுகள்..
