
கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கும் படம் “7 Star Boys”.
நிகில் பிரேம் ராஜ் இயக்க, இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன், பாலு வர்கீஸ், லுக்மான் ஆகியோர் நடித்துள்ளனர்
கேரளாவில் உள்ள கிராமத்தில் ஏழு சிறுவர்கள் கொண்ட குழு ஒன்று எப்பொழுதும் கால்பந்து விளையாட்டின் மீது தீரா காதல் கொண்டு தங்களுக்குள் குழு அமைத்து விளையாடி வருகின்றனர். சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களுக்கு முறைப்படி மைதானமும் அதற்குண்டான பரவலான இடமோ இல்லாததால் சிறுவர்கள் கிடைத்த இடத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்க அவர்களுக்கு உதவ முன் வருகிறார் கிராமத்தில் இருக்கும் ஆண்டனி ஒர்கீஸ் குழு. அவர்களுக்காக அவ்வூரிலேயே செடி கொடிகளை அகற்றி அவர்களுக்கென்று ஒரு மைதானத்தை உருவாக்கித் தருகிறார்.. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பயிற்சி தர முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ. எம். விஜய னிடம், சிறுவர்களுக்காக பரிந்துரை செய்து அவரையும் சம்மதிக்க வைக்கின்றனர்.. அவர் பயிற்சி தர அவ்வரிடமிருந்து நுணுக்கங்களை கற்ற சிறுவர்கள் கால்பந்தாட்ட போட்டியில் ஜெயித்தனரா இல்லையா என்பதே கதை.
இக்கதையின் முழு பலமே சிறுவர்கள் தான் சிறுவர்கள் அத்தனை பேரும் இயல்பான நடிப்பால் அசத்தியுள்ளனர்.
இவர்களுக்கு பக்கபலமாக ஆண்டனி வர்கீஸ். சிறுவர்களின் குறிப்பு அறிந்து அவர்களுக்கு உதவும் போதும், மைதானத்தை உருவாக்கிய அவர்களை விளையாட உற்சாகப்படுத்தும் இடத்திலும், அவர்களை ஊக்கப்படுத்தி அடுத்த கண்டத்திற்கு கொண்டு செல்லும் இடத்திலும் பெருமிதமாக தெரிகிறார்.
ஒவ்வொரு கால்பந்து போட்டி நடக்கும் இடத்திலும் ஃபயஸ் சித்திக்கின் ஒளி ப்பதிவு அருமை.
ஆரோக்கியமான ஸ்போர்ட்ஸ் டிராமா நடுவில் ஒரு அழகான குட்டி காதல் கதையை யும் சொருகி, திகட்டாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்
அழகான ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் ஜேக்ஸ் பிஜாய் யின் இசையில், ஸ்போர்ட்ஸ் டிராமாவை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள்.
