
கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் ‘அன்பில் அவன்’.
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக தனியார் கம்பெனி யில் வேலை செய்து வருகின்றனர்…வேலை பளு காரணமாக ப்ரீத்தி மிகவும் சோர்ந்து போகவே, கணவன் அசோக் செல்வன் அவளது ஆசையான ஹோம் ஸ்டே விடுதியை ஆரம்பித்து தரவேண்டும் என்று நினைக்கிறார்..
அதற்காக மலைப்பகுதியில் ஒரு வீட்டை வாங்கி அதனை மாற்றலாம் என்று எண்ணுகின்றனர்..
சில முக்கிய புள்ளிகளின் குறுக்கீடா ல் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட அதனை முறியடித்து தங்களது கனவு ப்ராஜெக்ட் ஐ நிறைவேற்றினர்களா இல்லையா? என்பதே மீத கதை…
தொடர்ந்து சிறந்த கதைகளாக தேர்ந்துடுத்து நடித்து கொண்டிருக்கிறார்..அதுபோல் இதுவும் சுவரஸ் யமாக.. கல்யாணத்துக்கு முன், பின் என இரண்டு வகையான தோற்றத்தில் அசோக் செல்வன்… மலை உச்சி யில் இருந்து தண்ணியில் குதிக்கும் காட்சி… பின் பாதியில் சண்டை காட்சியில் என அமர்க்களபடுத்தியிருக்கிறார் அசோக் செல்வன்..
ப்ரீத்தி முகுந்தன் கலக்கல்..
இவர்களை தாண்டி கவனிக்க வைத்தவர் மஹா டெல்லி கணேஷ்.
கதைக்கேற்ப வெறி ஏறிய கண்கள். நல்ல நடிப்பு.
கோவிந் வசந்தா இசையில் பாடல்கள் அருமை. கெளதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் மலைகளும், இயற்கை யையும் அழகாக படம் பிடித்துள்ளார்.
மொத்தத்தில் நீளத்தை கொஞ்ச குறைத்தால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருப்பான்..
