
சரவணன், வரலட்சுமி சரத்குமார்,பிரேம், கவிதா பாரதி, கல்லூரி வினோத் ஆறுபாலா ஆகியோர் நடிப்பில் ஜீ ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கும் தொடர் சட்டமும் நீதியும் 2.
சட்டமும் நீதியும்’ தொடரின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது, ‘சட்டமும் நீதியும்-2’
போலீஸ் அதிகாரியான பிரேம் சிலரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்படுகிறார். அது தற்கொலை என்று ஒரு சிலர் சொல்ல, அது கொலை தான் என்றும், அந்த கொலை வழக்கில் அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். கணவரின் கொலைக்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரேமின் மனைவியும், வக்கீலுமான வரலட்சுமி சரத்குமார்.
இன்னொரு புறம், கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் அல்ல; நிரபராதிகள் என்று வாதாடுகிறார் வக்கீல் ‘ சரவணன்.
கணவனை இழந்த மனைவியின் நீதி தேடும் போராட்டம் ஒரு பக்கம், இருக்க குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு நியாயத்தை நிரூபிக்க வேண்டிய வாதத்தை எடுத்து வைக்கும் வக்கீல் என நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் போக, போலீஸ் அதிகாரி பிரேமை உண்மையிலேயே தற்கொலை யா?? அல்ல கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
வக்கீலுக்கு உண்டான அனைத்து பரிமாணங்களிலும் மிளிர்கிறார், சரவணன். அவரது வாதம் ரசிக்க வைக்கிறது. எமோஷனல் காட்சிகளிலும், தான் தவறு செய்து விட்டோம் என்று வருந்தும் இடத்திலும் கவனம் ஈர்க்கிறார்.
கம்பீரமும், கோபமும் கொண்ட வக்கீலாக, தனது கணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும் மனைவியாக படம் முழுக்க அழுத்தமான நடிப்பை கொட்டியுள்ளார், வரலட்சுமி சரத்குமார். அவரது எல்லைமீறாத நடிப்பு ரசிக்க வைக்கிறது.
எஸ்.கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் இசையும் படத்துக்கு பக்க பலம்.. நேர்த்தியான திரைக்கதை . பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமின்றி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி செல்வராஜ்.
