
வின் ஸ்டார் நாயகன், விஜய் தயாரித்து, இயக்கி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘எப்போதும் ராஜா – பாகம் 1’.
அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் வின் ஸ்டார் விஜய் நடிக்க, நாயகியாக டெப்ளினா, பிரியா நடிக்க வில்லியாக கும்தாஜ் நடிச்சிருக்காங்க…
அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தம்பி வாலிபால் விளையாட்டு வீரராகவும் வர, நேர்மையான போலீஸ் அதிகாரியான அண்ணனுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்க, மதுரைக்கு மாற்றப்படுகிறார். சென்னையில் இருக்கும் தம்பி, வாலிபால் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இவருக்கு, எதிரிகள் கர்நாடகாவில் இருந்தும், டெல்லியில் இருந்தும் கிளம்பி வருகிறார்கள்… அண்ணண் தம்பி இருவருமாய் சேர்ந்து, அவர்களை முறியடித்து, அகில இந்திய வாலிபால் போட்டியில் தம்பி ஜெய்யிப்பதே .. கதை..
போலீஸ் மற்றும் விளையாட்டு வீரர் என்று முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் வின் ஸ்டார் விஜய், யின் தன்னம்பிக்கைக்கு ஒரு பாராட்டு…காதல், கோபம், சோகம், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளையும் தன் முக பாவத்தால் அசால்டாக வெளிப்படுத்தி அதகளப் படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் டெப்ளினா, வில்லியாக நடித்திருக்கும் கும்தாஜ் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பிரியா என அனைவரும் இயக்குநர் வின் ஸ்டாரின் ஆக்சன் க்கு ஏற்ப சொன்னதை செய்திருக்கிறார்கள்…
வின் ஸ்டார் இன் வசனங்களில் ஒன்றிரண்டு தெறிக்க விடுகிறது. உதாரணத்திற்கு, நல்லவனுக்கு கெட்டவன் எதிரி, கெட்டவனுக்கு அவனே எதிரி போன்ற ஒற்றை வரி வசனங்கள் உண்டு….தனக்கென்று காதல் காட்சிகள், பாடல்கள் வைத்திருந்தாலும், தனக்கு இது அதிகம் தான் என்று பன்ச் டயலாக் வைத்து, நம் வாயை மூட வைத்து விடுகிறார்… வின்ஸ்டார் விஜய்…
கபலிஸ்வர்- ராம்ஜி இசையில் கண்கள் மூடி பாடல்கள் கேட்கும் ரகம்.
எப்போதும் ராஜா பாகம் 1, கண்டிப்பாக இவரை தேடி வரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பார்…